நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, December 24, 2011

விண்ணைத் தொடும் விலைவாசி - தத்தளிக்கிறது கேரளா!



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதன் விளைவு கேரளாவில் வரலாறு காணாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளதாம். கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்பதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும் கூட அதுதான் என்கிறார்கள். அதேபோல பூக்கள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலையும் படு உயரத்திற்குப் போயுள்ளதாம். பாலை பெருமளவில் தமிழகத்திலிருந்துதான் கேரளா வாங்குகிறது. பெருமளவிலான பால் கர்நாடகத்திலிருந்தும் போகிறது. தற்சமயம், தமிழகத்திலிருந்து வரும் பாலுக்குத் தடை இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட மறைமுகமாக கிளம்பியுள்ள பொருளாதாரத் தடையால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டதாம். குறிப்பாக தேக்கடிக்கு வரும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அடியோடு நின்று விட்டது. இதனால் படகு குழாமில் மயான அமைதி நிலவுகிறது.

கேரளாவில்தான் இந்த நிலை என்றில்லை தமிழகத்திலும் கூட மலையாளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகம் முழுவதும் விரவிப் பரந்துள்ள கேரளக்காரர்களின் கடைகள் தினசரி தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

டீக்கடை, பேக்கரிக் கடை, நகைக் கடை, நிதி நிறுவனக் கடைகள் என பல வகையான தொழிலில் மலையாள மக்கள் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடைகள் தினசரி ஆங்காங்கு தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு கேரள அரசையும், கேரள அரசியல்வாதிகளையுமே அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெருமளவில் மலையாளிகள் வசிக்கிறார்களே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் கேரள அரசியல்வாதிகள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக அவர்கள் புலம்புகின்றனர். பல காலமாக நாங்கள் தமிழகத்தில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் எங்களுக்கு மிக மிக அதிக சுதந்திரம் உள்ளது. கேரளாவில் கூட நாங்கள் இப்படி இருக்க முடியாது. தமிழர்களைப் போலவே நாங்களும் மாறி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, என்ன செய்வது என்று புரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல பக்கங்களிலும் தமிழகத்தின் போராட்டத்தால் கேரள அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்புகள் வெளியே தெரியாத அளவுக்கு 'மேக்கப்' செய்து வருகிறது கேரள அரசு என்கிறார்கள்.

3 comments:

  1. என்னத்த சொல்றது மாப்ள!

    ReplyDelete
  2. இன்னும் வேணும் அவங்களுக்கு..

    ReplyDelete
  3. மனித இனம் அபூர்வ பிறவி, உயிர் வாழ இயற்கை வழங்கிய நீரும், உணவும் இல்லாமல் அரசியல் ஆதாயங்க்களுக்காக நம்மை நாமே அழித்துக்கொள்கிறோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...