முல்லைப் பெரியாறு பிரச்சினை:
சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரதம் வருகிற 8-ந்தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.
இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள்,
பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இதுபற்றி ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் (நோட் தி பாயிண்ட்) நடக்கிறது. இதில் இயக்குனர்களுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதா? அல்லது தனியாக போராட்டம் நடத்துவதா? என்று விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.
மனசாட்சி: சோத்திலே மண்ணு விளுந்திடும்னு பயம் - அந்த பயம் இருக்கட்டும். பார்க்கலாம் - முடிவு என்னன்னு.
முடிவு என்னான்னு பார்ப்போம்..
ReplyDeleteஇதில் இயக்குனர்களுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதா? அல்லது தனியாக போராட்டம் நடத்துவதா? என்று விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.//
ReplyDeleteகொய்யால சாப்பாட்டு பிரச்சினையிலும் பிரிவினையா...? ஒற்றுமையா போறாடுரதை விட்டுட்டு தனியா போறானுகளாம் வெளங்கிரும்...!!!
மனசாட்சி: சோத்திலே மண்ணு விளுந்திடும்னு பயம் - அந்த பயம் இருக்கட்டும். பார்க்கலாம் - முடிவு என்னன்னு.//
ReplyDeleteநாம மானங்கெட்டதனமா வலைத்தளங்களில் எழுதுறதை கவனிச்சுட்டுதான் இருக்காங்க இந்த நடிகருங்க, இப்பவாவது ரோஷம் வந்தா [[இருக்கா]] சரிதான் என்றாலும் இது டூ லேட் என்பதே என் கருத்து...!!!