நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, November 14, 2011

மாமியார் ஆகும் ஊர்வசி

அப்பா, பிள்ளை, தாய், மகன், அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என்று ஏராளமான உறவுகளை படமாக்கிய தமிழ் சினிமாவில் மாமியார்- மருமகன் பாசத்தை மையமாக வைத்து ஏதாவது படம் வந்திருக்கிறதா? அப்படி வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம். இதோ ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் ’பேச்சியக்கா மருமகன்’.

ஒரு மாமியார் தன் மருமகனை மகனாகவும், ஒரு மருமகன் தன் மாமியாரை தாயாகவும் பார்க்க வேண்டும் என்பதை உலகுக்கு சொல்ல வரும் படம்தானாம் இது.

’மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் தாய் தந்தை இல்லாத பிள்ளையாக நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்த தருண் கோபிதான் இப்படத்தின் ஹீரோ. இந்த படத்தின் கதை வசனத்தையும் இவரேதான் எழுதியிருக்கிறார். இயக்குனர் மட்டும் வி.பி.பாலகுமார் என்ற புதியவர்.

’மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இசையமைப்பாளர் சபேஷ் முரளிதான் இப்படத்திற்கும் இசை. சரி போகட்டும்... மருமகனாக தருண் கோபி நடித்திருக்கிறார். மாமியாராக? இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்து தென்னிந்திய மொழிகளில் எல்லாரையும் கவர்ந்திருக்கிற ஊர்வசிதான் அந்த கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கேரக்டர்கள் கொடுத்தால் பிரித்து மேய்ந்துவிடும் ஊர்வசி, இந்த படத்தில் நெஞ்சை தொடும் குணச்சித்திர நடிகையாக நடித்திருக்கிறாராம்.

திமிரு, காளை’ போன்ற படங்களை இயக்கியவர் தருண் கோபி. ’மங்காத்தா, ஆறுமுகம், பேராண்மை’ உள்ளிட்ட ஏராளமான படங்களின் விநியோகஸ்தரான மன்னன் பிலிம்ஸ்தான் இந்த படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவுதான் தமிழ்நாட்டிலிருக்கும் உறவுகளை பற்றி பேசினாலும், அதில் நடிக்க மும்பை நடிகைகளைதான் நாட வேண்டி இருக்கிறது. இந்த படத்திலும் பிரியங்கா என்ற நடிகையை அழைத்து வந்திருக்கிறார்கள்.’ பேச்சியம்மா ’ படத்தில் அறிமுகமாகும் இவர் பேசப்படுவாரா என்பதுதான் சஸ்பென்ஸ்

Sunday, November 13, 2011

தமிழனின் அடிமைத்தனம்

நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு  ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது.

தமிழர்களின் தேசபக்தி: "தமிழர்களை தேசபத்தியில் மிஞ்சுபவர்கள் யாரும் உலகில் இருக்க முடியாது" என்று நாம் பெருமையாக சொல்லிகொள்ளலாம். ஏன் என்றால்? தம் உறவுகள் ஈழத்திலே கொத்து கொத்தாக கொல்லப்படும் போது அதற்க்கு ஒரு பாரிய எதிர்ப்பை காட்டாமல் மவுனம் சாதித்த இனம்தானே நாம், வரலாறுகள் உங்களை அடிமைகளாக எழுதட்டும்.

தமிழனின்  அடிமைத்தனம்:  உயிர், இன, மொழி, கலாசாரம், எல்லாவற்றிலும் தமிழன் அடிமைபட்டு கிடக்கிறான். வடநாட்டுகாரன் தமிழனை ஆண்டாண்டாய் ஆளுகிறான். தமிழன் உயிர்பயத்தில் உணர்வுகள் செத்து அடிமையாக வட இந்தியனுக்கு சேவகம் செய்கிறான்.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 1: மெரிக்காவில் கலிபோர்னிய என்று ஒரு மாநிலம் உண்டு, மேச்சிகொவுக்கு சொந்தமான அந்த மாநிலம் 1846 நடந்த சண்டையில்  அமெரிக்காவின் 31  மாநிலமாக சேர்க்கப்பட்டது,

இருந்தாலும் அங்கு குடியிருக்கும் ஸ்பானிஷ் பேசும் மக்களுக்காக அந்த மாநிலத்தின் வங்கிகளில், அரசு தம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் ஸ்பானிஷ் பேச தெரிந்தவர்கள் வேலையில் இருப்பார்கள் அந்த மொழியிலும் படிவங்கள் இருக்கும். இது போதாது என்று அங்கு வாழும் மேக்ஸ்சிகன் மக்கள் தங்கள் மேக்சிகொவின் சுதந்திர தினத்தை அமெரிக்காவில் கொடி கெட்டி கொண்டாடுவார்கள். 

அதுமட்டுமா, டிரைவிங் டெஸ்ட் நீங்கள் ஹிந்தி, உருது, பஞ்சாபி, இப்படி எந்த மொழிகளில் வேண்டுமானாலும் எழுதலாம். அவசர போலீஸ், தீயணைப்பு, மருத்துவம் என்ற பிரிவுகளுக்கு நீங்கள் போன் செய்தால் உங்களுக்கு ஆங்கிலம் தெரிய தேவையில்லை உங்களுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் டிரான்ஸ் லேட் பண்ணும் நபர்கள் உடனே லைன் இல் வருவார்கள். இப்போ புரியும் நாம எப்படி இந்தியாவில் அடிமையா இருக்கிறோம் என்று.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 2:
தமிழக மீனவர்கள் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் சூடு, சுரணை, மானம் வெட்கம் இல்லாம் உணர்வற்ற பிண்டங்களாய், அடிமைகளாய் வாழ்கிறோம். வாழ்வது ஒரு முறை வீழ்வதும் ஒரு முறை என்கிற பழமொழி எல்லாம் தமிழில்தான் இருக்கு அதுவெல்லாம் தமிழனுக்கு ஏனோ புரியவில்லை.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 3: கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த அணுமின் நிலையத்தை கேரளாவில் நிறுவவேண்டியது தானே, கர்நாடகாவில், ஆந்திராவில் முடியாது அதுவும் இளிச்சவாயன் தமிழன்தான்.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 4 :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இது ஏற்ப்படுத்தும் கெடுதி இருகிறதே! இதை இந்தியாவின் எந்த மாநிலமும் அனுமதிக்கவில்லை. வந்தவர்களை வாழவைக்கும் தமிழர்களே இதிலும் இளிச்சவாயர்கள்.

உலகிலே ஒருவன் அடிமைத்தனத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்றால் அவன் தமிழர்களிடம் இருந்து கற்று கொண்டால் போதுமானது. தமிழா உன் அடிமை விலங்கை தகர்த்தெறி! சுதந்திர தமிழகமே எமது இலட்சியம் என்று முழங்கு! மானம் உள்ள தமிழனாக வாழவேண்டுமா! நீ சுதந்திர தமிழ் நாட்டின் குடிமகனாக வேண்டும்

Wednesday, November 2, 2011

விடுதலையாகும் கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது ஆன கனிமொழி எம்.பி., 160 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார். 

இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.

சுவான், டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரை ஜாமீனில் விடுவதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. 

ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்த 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது, 3-ந்தேதி தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட்டு அறிவித்து உள்ளது. அதன்படி நாளை தீர்ப்பு கூறப்படுகிறது. கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது.

அப்போது சிபிஐ தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கனிமொழி உள்பட 5 பேருக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்ற காரணத்தை தெரிவித்தனர். இதை சுப்ரீம் கோர்ட்டு பதிவு செய்து கொண்டது. சிபிஐ விளக்கத்தில் 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி நாளை விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல் சிபிஐ எதிர்க்காத மற்ற 4 பேரும் விடுதலை ஆவார்கள்.   கனிமொழியை சந்திப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 3 முறை டெல்லி சென்றுள்ளார். கடந்த முறை அவர் சென்றபோது கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே கனிமொழி விடுதலை ஆனதும் அவருடன் கருணாநிதி, சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பு நவம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், அன்று ஜாமீனில் அவர் வெளிவர முடியவில்லை. தற்போது சிபிஐ வக்கீல்கள் தங்கள் விளக்கத்தை தெளிவுப்படுத்தி விட்டதால் கனிமொழி நாளை நிச்சயம் ஜாமீனில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய மந்திரி மு.க. அழகிரி இன்று காலை டெல்லி சென்றார். கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட கட்சி நிர்வாகிகள் சிலரும் டெல்லி சென்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி செல்கிறார். டி.ஆர். பாலு எம்.பி., வசந்தி ஸ்டான்லி உள்பட அனைத்து தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் டெல்லி செல்கிறார்கள்.

நாளை விடுதலையாகும் கனிமொழி எம்.பி-ஐ வரவேற்கவே இவர்கள் டெல்லி செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, November 1, 2011

கூடங்குளம்: மத்திய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

 
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேசி பிரச்னையைத் தீர்க்க வேண்டுமே தவிர. வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை மேலும் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கூடங்குளம்  அணுமின் நிலையம் செயல்படுவதை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18.09.2011 அன்று நான் அங்கு நேரில் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்தேன். அப்பொழுது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்திய அரசு உடனடியாக அந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
22.09.2011 அன்று தமிழக அமைச்சரவை கூடி மக்களின் அச்சத்தை போக்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரை அனைத்துக் கட்சியினரும், போராட்டக் குழுவினரும் இது சம்பந்தமாக சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரையும் இக்குழு சந்தித்தது. அதற்கு பிறகு கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமான பிரச்சினைகளை மக்களிடம் விவாதிக்க இந்திய அரசு ஒரு நிபுணர் குழுவையும் நியமித்துள்ளது. போராட்டக் குழுவினர் இக்குழுவினை ஏற்கவில்லை.
இதற்கிடையில் இந்திய அரசு அணுமின் நிலையப் பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக செல்வதை போராட்டக் குழுவினர் தடுப்பதாகவும், அமைதியாக போராட்டம் நடத்துவதாக தெரிவித்துவிட்டு, வன்முறையை உருவாக்கும் சூழ்நிலையை போராட்டக் குழுவினர் உருவாக்குகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து இந்திய அரசு இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்குப் பதிலாக இதை ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மாற்றி போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறையைக் கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தாய்மார்கள், பள்ளிப் பிள்ளைகள் உட்பட பல்லாயிரக் கணக்கான மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வருவதை அனைவரும் அறிவர். இதை உணர்ந்து மத்திய அரசு போராடும் மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாக பேசி பிரச்னையை தீர்க்க வேண்டுமே தவிர, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை மேலும் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத் தக்கதாகும். உடனடியாக இந்தப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்றும், தமிழக அரசு தான் நிறைவேற்றிய தீர்மானத்தை வற்புறுத்தும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருப்புப் பணம்: சோனியா, ராகுலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

சுவிஸ் நாட்டில் ஒரு வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு சொந்தமானது என்ற சந்தேகம் உள்ளது. இந்த கணக்கு மீது இவர்கள் இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதிலும், இந்த சொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்.

கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்த விபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ் வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது நிலையை விளக்கவும், அந்த கணக்கில் உள்ள பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு  ரூ 1.82 உயர்த்த முடிவு  செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன    

கச்சா எண்ணெயின்  விலை ஏற்றம் ரூபாய் மதிப்பின் இறக்கம்   போன்ற காரணங்களால் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விலையேற்றம் அடுத்த இரண்டு வராங்களுக்குள் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

முன்னதாக ,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்  கடந்த இரண்டு மாதங்களுக்குள் லிட்டருக்கு ரூ 5  உயர்த்தியது குறிபிடத்தக்கது

மூடு ஏற்றும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைபிடிக்கிறார்.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி நடிகை அனுஷ்காவுடன் நடிக்க முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி உழைக்கிறார். அவர் என்ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைபிடிக்கிறாராம். ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும்போது, ஆளைத் தூக்கும் அளவுக்கு வாசனை உள்ள சென்ட் அடித்துக் கொள்வாராம். அந்த வாசனையில் ஹீரோவுக்கும் ரொமான்டிக் மூடு வந்து, தனக்கும் நல்ல மூட் வந்து காட்சி சூப்பராக வரும் என்பது அவரது ஐடியா.

அதேபோன்று சோகக் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு செட்டில் யாருடனும் பேசாமல் ஒரு ஓரமாக அமைதியாக உட்கார்ந்திருப்பாராம். அவ்வாறு செய்வதால் சோகமான மூடு பார்ம் ஆகி காட்சி கலக்கலாக வந்து விடுமாம். அது மட்டுமல்ல தனக்கு யோகா தெரியும் என்பதால் பிறரையும் யோகா செய்யுமாறு கூறி சில ஆசனங்களையும் கற்றுத் தருகிறாராம்.

பரவாயில்லையே, 'கஷ்டப்படாமல்' நடிப்பைக் கற்று வைத்திருக்கிறாரே அனுஷ்கா...!

வயசு 80 தமிழ் சினிமாவுக்கு

தமிழின் முதல் பேசும் சினிமா 'காளிதாஸ்' 1931ம் ஆண்டு தயாராகி வெளியானது. வட சென்னையில் முருகன் தியேட்டர் என்று அறியப்பட்ட கினிமா சென்ட்ரலில் இந்தப் படம் வெளியானது.

டிபி ராஜலட்சுமி, பிஜி வெங்கடேசன், ராஜாம்பாள், சுசிலா தேவி, எல் வி பிரசாத், எம்எஸ் சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, மதுரகவி பாஸ்கர தாஸ் கதை, பாடல்கள், இசை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தார். ஹெச் எம் ரெட்டி இயக்கினார். அர்தேஷ்ரி எம் இராணி தயாரித்த இந்தப் படம்அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

மும்பையில் தயாரான இந்தப் படத்தின் ரீல் பெட்டிகளை ரயிலில் சென்னை கொண்டுவந்த போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மலர் தூவி, மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு போய் கொண்டாடினார்களாம்.

இந்த 80 வருட சினிமா சரித்திரத்தில் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையும் காளிதாசுக்கே உண்டு. சினிமா என்ற ஆச்சர்யம் தாங்காமல் ரசிகர்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்தனர் இந்தப் படத்தை.

இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தனர் பின்னாளில். எல் வி பிரசாத் பெரிய சினிமா சாம்ராஜ்யத்தையே நிறுவினார்.

தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் படமாக மாறிவிட்டது காளிதாஸ்.

கனடா பிரதமர் புறக்கணிப்பு

பெர்த் நகரில் காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.

இலங்கையில் 2013ம் ஆண்டு அடுத்த காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 53 நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து உரை நிகழ்த்தினார்.


ராஜபக்சேவை மாநாட்டில் பேச அழைக்கப்பட்டதும் கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹாபர், மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் ராஜபக்சேவுக்கு தனது எதிர்ப்பை காட்டினார்.


கடந்த வாரம் ராஜபக்சேவுடன், ஸ்ரீபன் ஹாபர் நேரடியாக பேசியிருந்தார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவரிடம் விவாதித்தார். காமன்வெல்த் கூட்டத்திற்கு முன்பாக இதற்கு இலங்கை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உறுதிப்பட கூறியிருந்தார். அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்சேவின் உரையை புறக்கணிப்போம் என்று கூறியிருந்தார். அதன்படி ஹாபர் வெளிநடப்பு செய்தார்.

கனிமொழியின் ஜாமீன் : சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவான பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. 

இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவானதும் சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பட அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு விசாரணையின் போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே சமயம் ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வா, ராசாவின் தனிச்செயலாளர் சந்தோலியா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வருகிற 4-ந்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். 

இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் 4 நபர்களின் ஜாமீன் மனுவை எந்த அடிப்படையில்  எதிர்க்கவில்லை என்பதை சி.பி.ஐ. விளக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

அஞ்சலி....அஞ்சலிதான் - முருகதாஸ்

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்தே அஞ்சலி மீது அத்தனை அன்பாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி சொன்னவுடன் கண், காது, மூக்கு, என்று ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் போட்டு யோசித்தால் ஏமாந்து போவீர்கள் மக்களே... இது அந்த மாதிரி விஷயமல்ல. நவீன சாவித்திரி என்று கொண்டாடாத குறையாக அவரை தலைமேல் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் முருகதாஸ் மீண்டும் அவரையே தனது அடுத்த படத்திலும் கதாநாயகியாக்கியிருக்கிறார் என்பதுதான் விஷயம்.

ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இருக்கும் முருகதாஸ் 7 ஆம் அறிவு படத்தில் அதை கோட்டை விட்டு விட்டார் என்று விமர்சகர்கள் பொறிந்தாலும், அவர் மேற்பார்வையில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், எப்போதும் பேசப்படுகிற அளவுக்கு சிறந்த திரைக்கதையை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றி முருகதாசுக்கு மேலும் மேலும் நம்பிக்கையை கொடுக்க, ஏகபோக சந்தோஷத்தோடு தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் அவர்.

இப்படத்தில் முருகதாசிடம் 7 ஆம் அறிவு படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய திரு என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த அறிமுகம் இதோடு நிற்கவில்லை. இப்படத்தின் ஹீரோ முருகதாசின் தம்பிதான்

தி மு கவின் தோல்வி ஸ்டாலின் கண்டுபிடிப்பு

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காகத் தான் கடந்த தேர்தலில் எங்களை மக்கள் தோற்கடித்தார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூரில் நடந்த திமுக பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், 1967ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சீர்திருத்த திருமணங்கள் சட்டபடி செல்லுபடியாகும் என்று சட்டசபையில் முதல் தீர்மானம் கொண்டு வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக தலைவர் கருணாநிதி பல நலத் திட்டங்களை கொண்டு வந்தார். அப்படிபட்ட திட்டங்களுக்கு என்ன பரிசு கிடைத்தது? சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தோம்.

ஆனால், அப்படிபட்ட தோல்வியை கண்டு திமுக துவண்டுவிடவில்லை. ஆட்சி மாற்றத்தால் மக்கள் வேதனை தான் படுகிறார்கள். தோல்விக்கான காரணம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். அப்போது ஒன்றை உணர முடிந்தது. கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காக தான் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை உணர முடிந்தது.

ஆனால், இப்போது தலைவர் கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் எங்கே என்று மக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள். உயர் சிகிச்சை, கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் உள்பட எத்தனையோ திட்டங்கள் இந்த ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்குத் தான் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பொய் வழக்குகளையும் தாண்டி திமுக 30 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது.. வரும் காலம் நம்முடையது என்பது தெரிகிறது.

எப்போதுமே வெற்றி தோல்வியை சமமாக கருதி உண்மையாக உழைப்பவன் தான் திமுக தொண்டன் என்றார் ஸ்டாலின்.

Monday, October 31, 2011

ஏடிஎம் கொள்ளையர்கள் - விழிபிதுங்கி மக்கள்



சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகளில் போலி டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் பணம் சூறையாடப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நவீன முறையில் நடந்து வரும் இந்த சைபர் குற்றச் செயலால் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் முக்கியத் தகவல்களை நூதன முறையில் திருடி அவற்றை வைத்து போலி கார்டுகள் தயாரித்து அவற்றின் மூலம் ஏடிஎம் மையங்களில், வாடிக்கையாளர்களின் பணத்தை அபகரித்து வருகிறது ஒரு கும்பல். இந்த திருட்டால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் அவற்றைப் பறி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிட்டத்தட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் போலி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது அதில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் (இவற்றில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் விவரங்களும் அடக்கம்) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இன்டர்போல் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு சென்னை போலீஸார் எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியுள்ளனர். போலி டெபிட், கிரெடிட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தைக் காக்குமாறு அந்த வங்கிகளை அறிவுறுத்துமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தினசரி சென்னை காவல்துறைக்கு இந்த ஏடிஎம் திருடர்களால் பணத்தைப் பறி கொடுத்து விட்டு பலரும் புகாருடன் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நெட்வொர்க்கில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களை வளைத்துப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை 150 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகார்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதால் ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பெருமளவில் நகரில் நடமாடுவதாக போலீஸார் அஞ்சுகிறார்கள். இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தக் கும்பலின் தலைவனாக செயல்படும் நபர் இன்னும் சிக்கவில்லை. அவனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன். சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு அனைத்து வங்கிகளையும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுக்க வருவோரை தீவிரமாக கண்காணிக்குமாறும், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மையங்களில் உடனடியாக அவற்றைப் பொருத்துமாறும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை

இயக்குனர் சேரன் தயாரித்து அமுதன் இயக்கிய தொடரும் நீதிக்கொலைகள்என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். 

அப்போது பேசிய சத்யராஜ், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வெளிவந்த பெரும்பாலான ஆங்கிலப் படங்கள்  அதை தழுவியே எடுக்கப்பட்டன. அதேபோல் இனி தமிழகத்தில் வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் ஈழ விடுதலையை சார்ந்ததாகவே இருக்கும்.
 
சினிமா வியாபாரம் சம்பந்தப்பட்டது. ஏன்னா போட்ட பணத்தை எடுக்கத்தான் எல்லாரும் நினைப்பாங்க. எந்த விஷயத்துக்காக மக்களின் கைதட்டல் அதிகமாக கிடைக்கிறதோ அது தான் அதிகமாக படத்தில் வரும். சில்க்கின் கவர்ச்சி நடனத்துக்கு கைதட்டல் கிடைத்தால், அந்த கவர்ச்சி நடனத்தை எல்லா படத்திலும் வைப்போம்.  கவுண்டமணி, செந்தில் காமெடிக்கு கைதட்டல் அதிகமாக கிடைத்தால்,

அதை எல்லா படத்திலும் வைப்போம். எதற்கு தியேட்டடில் மக்கள் கை தட்டுகிறார்களோ அதை நோக்கி சினிமாவின் பார்வை திரும்பும். இன்று ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி உள்ளது.

இப்போது வெடிஎன்ற படம் வெளியாகி இருக்கிறது. விஷால் அதில் நடித்திருக்கிறார். அது சராசரியான மசாலா படம் தான். அந்த படம் பற்றி உங்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், அதில் ஹீரோ விஷால், என் பெயர் பிரபாகரன், எனக்கு பயம்ன்னா என்னனு தெரியாது என்ற வசனத்தை பேசும் போது, தியேட்டர் இடிந்து போகிற மாதிரி கைத்தட்டல் கிடைத்திருக்கிறது.

அதேபோல சூர்யாவின் 7ஆம் அறிவுபடத்தில் ஈழம் விடுதலை சம்பந்தமான பல வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த வசனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுதான் தமிழர்களின் உணர்வு.

எல்லாரும் வீதியில் இறங்கி போராடும் நிலைமை இல்லை. அதற்கு அவர்களுடைய சூழல், குடும்ப சூழல் என பல பிரச்சனைகள் இருக்கிறது. எல்லாரும் போராட வீதிக்கு வரவில்லை என்பதற்காக தமிழர்களுக்கு உணர்வு இல்லை என்று அர்த்தமாகிவிடாது.

எனவே ஈழ விடுதலைக்கு மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு திரண்டு வருகிறது, எனவே ஈழ விடுதலை பற்றி மேலும் பல படங்கள் வெளிவரும் என்றார்.


ரேப் சீனுக்கு கூப்பிடுறாங்க

பாலியல் பலாத்கார காட்சிகள் நடிக்கத் தான் என்னை அதிகம் அழைக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் வருத்தப்படுகிறார்.

நடிகை ராக்கி சாவந்த் தனது நடிப்பை விட சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏதாவது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வார். சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ராக்கி வித்தியாசமாக ஒரு புலம்பலை வெளியிட்டுள்ளார். எனக்கு பலாத்கார காட்சிகளில் நடிக்கத் தான் வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க எனக்கு விருப்பமில்லை. என்னை ஏன் இப்படிபட்ட காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது என்று ராக்கி தெரிவித்துள்ளார். மேலும் கூடவே, ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனேவையும் வம்புக்கிழுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நான் ஆடும் பாடல்கள் ஆபாசமாக உள்ளது என்று தணிக்கை குழு நிராகரிக்கிறது. ஆனால் என் பாடல்களை விட ஆபாசமான 200 பாடல்களை என்னால் காட்ட முடியும்( எடுத்துக்காட்டாக ஜான் ஆபிகாம் மற்றும் தீபிகா படுகோனே பாடல்கள்). கான், கபூர், பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதற்காக தணிக்கைக் குழு என்னையே குறி வைக்கக் கூடாது.

இத்தனை நாட்களாக டிவியில் கவனம் செலுத்தினேன். தற்போது புதிய உதவியாளரை பணியமர்த்தியுள்ளேன். விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் தேஜாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

நம்புங்கள்... அரசுத் துறைகளில் லஞ்சம் கிடையாது

வரும் 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில், லஞ்ச எதிர்ப்பு வாரம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் மத்திய, மாநில அரசுப் பணிகளை லஞ்சம் கொடுக்காமல் முடிக்க முடியும் என, பல்வேறு தரப்பில் நம்புகின்றனர்.

உலகம் முழுவதும் ஊழல் பெருத்து விட்டது. ஊழல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த நாடு? எந்த துறை? கடைசியில் இருப்பது எந்த நாடு? எந்த துறை? என்று, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, பட்டியல் தயாரிக்கும் நிலை வந்துள்ளது.கடந்த ஆண்டில், 180 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வதேச ஆய்வின் படி, இந்தியா 87வது ஊழல் நாடாக உள்ளது. முதலிடத்தில், நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் நாடுகள் உள்ளன. முதலில், 110 வது இடத்தில் இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் படிப்படியாக ஊழல் நடவடிக்கைகளில் முன்னேறி, 87வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், வரும் 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க வேண்டுமென, மத்திய ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசின் துறை செயலர்கள், மாநில அரசு தலைமை செயலர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், மத்திய, மாநில அரசின் கல்வி மையங்கள், பணியாளர் தேர்வாணையங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்கள், அமைப்புகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மத்திய, மாநில அமைச்சரகங்கள், அனைத்து துறைகளின் தலைமை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:லஞ்சம் மற்றும் ஊழல் வாரம் குறித்த விழிப்புணர்வு தகவல்களை, அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், பொதுமக்களின் பார்வையில் படும்படி, பேனர்கள் மற்றும் அறிவிப்புகளாக வைக்க வேண்டும். ஊழல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இதுதொடர்பாக போட்டிகள் நடத்தி பரிசு தர வேண்டும்.ஊழல் எதிர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஊழல் எதிர்ப்பு குறித்து பிரபலமானவர்கள் அல்லது நிபுணர்களை கொண்டு, பிரசாரம் செய்ய வேண்டும். அக்டோபர் 31ம் தேதி, காலை 11 மணிக்கு, சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்க வேண்டும்.இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்து, அதன் பாசிட்டிவான அறிக்கைகளை, நவம்பர் 15ம் தேதிக்குள் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊழல் அதிகரிப்பதற்கு, லஞ்சம் கொடுத்து இளைஞர்கள் வேலைக்கு சேர்வதே முதல் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த காலங்களில், பெரிய அளவிலான ஊழல்களில், சில மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டுள்ளனர். அரசுத்துறைகளில் பணிகள் முடிவதற்கு பெரிய அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.இதற்கிடையில், வரும் வாரத்தில் ஊழல் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படும் நிலையில், மத்திய, மாநில அரசுத்துறைகளில், அலுவலக உதவியாளர், பாதுகாவலர் முதல் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள் வரை, யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், பணிகளை முறையாக முடிக்கலாம் என நம்புவோம்.

ஊழல் துறைகள்:லஞ்சம் கொடுத்து வேலைவாய்ப்பு, வரி ஏய்ப்பு, மாநில எல்லைகளில் பொருட்கள் கடத்தலுக்கு லஞ்சம், சான்றிதழ்கள் பெற லஞ்சம், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலஅபகரிப்பு மற்றும் ஆவண தயாரிப்புக்கு லஞ்சம், அரசுத்துறை டெண்டர் மற்றும் கான்ட்ராக்ட் பெற லஞ்சம், போலி மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவண ஊழல், வருமானவரி ஏய்ப்பு, சட்டவிரோதமாக கனிமங்கள் உட்பட இயற்கை வளங்களை சுரண்ட லஞ்சம், தரம் குறைந்த பொருட்களை விற்க லஞ்சம், போலியாக விசா, பாஸ்போர்ட் பெற லஞ்சம், போலீஸ் துறையில் வழக்குகளை முடிக்க லஞ்சம்...இப்படி நீண்டுகொண்டே போகும்.