நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, April 30, 2012

வாழ்க்கை பொய்யானது

நல்ல  நீண்ட கால நட்புக்கு இரண்டு கோல்டன் சொற்றொடர்கள்:

  • நம்புகிறவர்களை சந்தேகபடாதே...
  • சந்தேகபடுபவர்களை  நம்பாதே... 


     
                       
நான் பிறந்த பொழுது,
என்னை தாங்கி பிடித்து இருந்தாள் ஒரு பெண் - என் அம்மா.

நான் குழந்தை பருவத்தில்  என்னுடன் அக்கறையாக  & விளையாடி  இருந்தாள் ஒரு பெண்  - என் சகோதரி

நான் பள்ளி சென்று பலதும் கற்க உதவியாக இருந்தாள் ஒரு பெண்  - என் ஆசிரியர்

நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில்  தோள் கொடுத்தால் ஒரு பெண் - என்  தோழி

நான் இணக்கத்தன்மையுடனும்  துணையுமாக  & காதலுடன் ஒரு பெண் இருந்தாள்  - என் மனைவி

நான் எவ்வளுவு உறுதியாக மனநிலையில் இருந்தாலும் என்னையும் 
உருக்கி விடும்
  ஒரு பெண்  - என் மகள்

நான் எப்போது இறப்பேன் என்று காத்திருந்து கிரகித்து கொள்ளும்  ஒரு பெண் - என் தாய்மண் (நிலம்,மதர் லேன்ட்)

நீங்கள் ஒரு ஆண் ஆக இருந்தால்  பெண்களை மதியுங்கள். 
 
அல்லது

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.


                                            

வாழ்க்கை பொய்யானது எப்போ உன்னுடன் "F" இல்லையோ.

"F" ஒண்ணுமே இல்ல ஆனா அதுவும் முக்கியம். 
வாழ்வில் ஒருபோதும் "F" இல்லாமல் இருக்க வேண்டாம் !!

"F" ? = Female , Friendship , Family , Faith, Food,,,,,,


  


நிலவு தூரத்தில் உள்ள போதும்

நட்சத்திரங்கள் என்னை வழி நடத்தும்
போதும்


மின்மினி பூச்சி என்னை சுற்றி பறக்கும் போதும்

என் அறையில் அமர்ந்தும் உன்னை நினைத்து கனவு கண்டு, ,


நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்?


 


 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




அட....பார்ரா எம்புட்டு   அழக்கா இருக்காங்ங்ங்..

 பார்த்துண்டே  இருக்கலாம்னு தோணுதுங்..

 யாருங்ங்? இவுங்?

தெரிஞ்சவங்... சொல்லுங்ங்ங்.


 
நன்றி படங்கள் - முகநூல் &  கூகிள்

Wednesday, April 25, 2012

அ முதல் ஃ தானடா ஆபீஸ்லே இருக்குதானடா

அ முதல் தானடா

ஆபீஸ்லே இருக்குதானடா

இதயமில்லா செயல்தானடா

ஈர மில்லா மனசுதனடா

உனக்கும் இது தெரியுமடா

ஊருக்கும் இது புரியுமடா

எல்லாம் தெரிந்துதாண்டா

ஏகத்துக்கும் நடக்குதடா

ஐயம் விட்டு  போச்சுதடா

ஒரு வார்த்தை சொல்லுதானடா

ஓப்பாரியா குரலை பாருடா

ஃக் அந்த ஒத்த வார்த்தை ஊழல்தானடா.

ஹி ஹி ஹி.... நம்மை  சுற்றி ஓர் பார்வை:
வரவேற்பாளர்  

காரியதரிசி 

முதலாளி மகன்



மேலாளர்

விற்பனையாளர்

(பேச்சு வழக்கில்) பிறர் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவல்மிக்கவர்


கஷ்டப்படும்  தொழிலாளி

தகவல் தொடர்பு

தளவாடங்கள்

நிதி மேலாளர்  


ஆட்சேர்ப்பு அதிகாரி

விரக்தியடைந்த தொழிலாளி

விற்பனை அதிகாரி 

நடுத்தர மேலாளர்

பயிற்சியாளர்


முதலாளி மனைவி
முதலாளி

நல்லா பாருங்க... முதலாளி என்ன பண்றார்............ஹி ஹி ஹி தொழில் ரகசியமுங்க(பிஸ்னெஸ் சீக்ரெட்)



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




கரு விழியால் கவிபாடும் காந்த கண்ணழகி


நன்றி  படங்கள் கூகிள்

Tuesday, April 24, 2012

பவர் ஸ்டார் பவரு எப்பூடீ....


இந்தியாவில் உள்ள பள்ளியில்  6ஆம் வகுப்பறை:
 
வரலாறு ஆசிரியர் : "பிரிட்டிஷ்க்கு  எதிராக போராடிய  சில பிரபலமான இந்தியர்கள் பெயர் சொல்லவும்?"
 
மாணவர்: "சச்சின், டிராவிட், லட்சுமண், ஷேவாக், டோனி, ரெய்னா ..." ! 



 பவர் ஸ்டார் பயன்படுத்திய பைக்காம்...?

ஏலேயீ.....பவர் ஸ்டார் பைக்கே இம்புட்டு பவர்ன்னா!!

பவர் ஸ்டார்..?ன்னா...  பஸ் நொறுங்கி இல்ல போகும்.
 


ரஜினிகாந்தால் மட்டுமே முடியும்:

பெண்களால் ஆண்களுடன் விளையாடமுடியாத விளையாட்டு(பப்ளிக்...பப்ளிக்.)

மனைவிகளுக்கு ஓர் எச்சரிக்கை Vs கணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:




விஸ்கி லொள்ளு & ஜொள்ளு




ஏற்கனவே இரண்டு தடவ   லொள்ளு பண்ணி ஜொள்ளியாச்சு....

இப்ப என்ன சைடுல லுக்....அடிங்.  கொய்யால...... சரியி.....சரிய்......அவ்வ்வ்வ்வ்வ்

நூடுல்ஸ் இடையாளே

லுக்கே....கிக்காக..... நூலாகி போனேனே...
 



Sunday, April 22, 2012

பெண்களின் சித்திரம்

அழகான  கவர்ச்சியான பெண்களை  முட்டைகோஸ்  மூலம் அற்புதமான படைத்துள்ளார்  சித்திரமாக, சீனாவை சேர்ந்த  கலைஞர் யூ டௌசி.

படைப்புகளில் சில:














விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு


ஆண் என்றால் வீரன் என்றும், பெண் என்றால் அன்பு  என்றும் சொல் வழக்கு: 

ஆண் அன்பு  காட்ட தொடங்கினால் எந்த பெண்ணாலும் ஈடுகொடுக்க முடியாது.

பெண் வீரம் காட்ட தொடங்கினால் எந்த ஆணாலும் ஈடுகொடுக்க முடியாது.

ஏன்னா,

ஆண் - வீரம் 40 % அன்பு 60  %

பெண் - வீரம் 60 % அன்பு 40  %

Wednesday, April 18, 2012

பெரியாரின் விடுதலை

     மனசாட்சியின்  250வது  பதிவு:


 


 

 இணைய தளங்களின்  வாயிலாக....., 

அண்மையில்  பெரியாரின் விடுதலையை வாசிக்க நேர்ந்தது..

அதில் இருந்து சில துளிகள்:  

 


 

       தமிழனுக்குத் தலைமை தாங்க யோக்கியதை இல்லை; தமிழன் பொறாமைக்காரன்; தன் இனத்தான் தலைமைப் பதவிக்கு வந்தால் தன் சுயநலத்திற்குக் காலை வாரிவிடவே பார்ப்பான்; அதனால்தான் தமிழ்த் தலைவன் இதுவரை ஏற்படவில்லை." - [பெரியார், 01.07.1954]

 
    "உள்ளபடியே வயிறு எரிந்து பேசுகிறேன் இவ்வளவு நடந்த பிறகும் மானமுள்ள தமிழன் எவனாவது காங்கிரசில் இருப்பானா? சும்மா சுயநலத்துக்கும், புகழுக்கு இருப்பவர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மற்றவர்களைக் கேட்கிறேன்." - [பெரியார், 28.08.1953]

 

 
   இந்த அரசியல் கட்சி என்னும் நோய்க்கு ஆட்படாமல் தப்பித்து உள்ள மனிதர்களே மிக மிகக் குறைவு! எவனை எடுத்துக் கொண்டாலும் நான் அந்தக் கட்சி! நான் இந்தக் கட்சி! வெங்காயம் இப்படித்தான் கூறுவான்! இந்த அரசியல் கட்சிகளால் இந்த நாட்டுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படவில்லை என்றாலும் - தீமைதான் மிகுதியாக ஏற்படுகின்றன. - [பெரியார், 'விடுதலை', 22.07.1960]  
      

 

பெண்களுக்கும் ஆண்களைப் போல சரி சமமான உரிமைகள் அத்தனையும் இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் சமுதாயம், உலக சமுதாயத்திற்குப் பயன்பெற முடியும். இப்போது பெண்கள், சமுதாயத்திற்கு பயன்படாமல் போய் விட்டார்கள். இது மாறினால் தான் நாடு முன்னேற்ற மடைய முடியும். - பெரியார், ['விடுதலை' 06.12.1968]


 
பெண்ணிற்குத் தான் பத்தினி, பதிவிரதை என்றானே ஒழிய, ஆணிற்குப் பதிவிரதன் - பத்தினன் என்று வரம்பு சொல்லக் கிடையாது. - பெரியார், ['விடுதலை' 06.12.1968]

 

நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது? 100-க்கு 90-தாலி அறுப்பதற்குத்தானே! பெண்ணை "முண்டச்சி"யாக்கவும், சகுனத் தடையாக்கவும், ஆண்கள் பெண்களை மிரட்டவும், அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும் தான் பயன்படுகின்றன. - பெரியார், ['விடுதலை' 15.11.1968]

 

 
கண்ணகி : "நம் நாட்டிலிருக்கிற கோடிக்கணக்கான பெண்களில் அவள் ஒருத்திதான் பத்தினி என்றால் மற்ற பெண்கள் எல்லாம் யார்? உன் தாய், என் தாய், உன் தங்கை, என் தங்கை, மற்ற பெண்கள் அனைவரும் பத்தினித் தன்மை அற்ற விபசாரிகளா? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ஒருத்தியை மட்டும் பத்தினி என்று புகழ வேண்டுமென்று கேட்கிறேன்." - பெரியார், ['விடுதலை' 15.11.1968]

 
நான் கடவுள் மறுப்புக் கூறுவது மனிதனின் அறிவைத் தூய்மைப்படுத்தி அவனது அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். மனிதனின் அறிவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவே கூறுகின்றேன். - பெரியார், ['விடுதலை' 15.11.1968]



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இல்லை.!  மனசாட்சி இடம் தரல....