நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label ஆயிரம். Show all posts
Showing posts with label ஆயிரம். Show all posts

Monday, December 24, 2012

பதினைந்து அங்குல! மா.....முடியல

வணக்கம்


கணவன் மனைவியிடம்,  

உனக்கு என் மேல் விருப்பமோ, நேசிப்போ இல்ல   
.
.
.
மனைவி தனது ஐந்து குழந்தைகளையும் 
பார்த்துக்கொண்டே,  

சொன்னால்:  


என்னவோ இவங்களை எல்லாம் நான் கூகுள்ல இருந்து  பதிவிறக்கம் செய்தது மாதிரில்ல பேசுறீக !?


========================================================

ஒரு பெண்  பல்பொருள் அங்காடி செல்கிறாள்.

அங்கு விற்பனையாளரிடம் ஒரு ஜோடி திரைச்சீலை (கர்டன்) இளஞ்சிவப்பு நிறத்தில்  வேணும்  என்கிறாள்.

ஒ....எஸ்... நிறைய விதவிதமாக இருக்குங்க என்கிறான்.

அழைத்து சென்று  காண்பிக்க இளஞ்சிவப்பு திரைச்சீலைகள் அதில் பிடித்த ஒன்றை தேர்வு செய்து... இது வேண்டும் என கூறுகிறாள்.

விற்பனையாளர் "உங்களுக்கு  என்ன அளவுவில் வேண்டும்?", என்று கேட்கிறார்

"பதினைந்து அங்குல," அவள் பதிலளிக்கிறாள்.

"பதினைந்து அங்குல!" மா குழப்பத்தில் விற்பனையாளர்...எந்த அறையில்  இருக்கு?"

"பெண்மணியோ, ஒரு அறையிலும் இல்லை, அது  என் கணினிக்கு  என்று  கூறுகிறார்.

வியப்புடன் விற்பனையாளர் "மிஸ், கணினிக்கு  திரைச்சீலை தேவையில்...",

அந்த பெண்ணோ : ஹல்ல்ல்லோ ......... எங்  கணினியில் விண்டோஸ் இருக்கு.......
 
==============================================================



மீன் புடிக்கிறாங்களோ??....ம்..நீங்களே பாருங்களே

முடியல

 


                                                                                           






(இக் காட்சியை  படம் பிடித்த புகைப்பட கலைஞனுக்கு, சபாஷ் ) 

======================================
மனபிராந்தி : காத்துவாக்குல & காதுல

எந்த ஒரு செயலையுமே, உண்மையிலேயே செய்ய வேண்டும் என்றால்,

அதற்கான வழியை கண்டுபிடிப்போம்.., வேணாம் என்று நினைத்தால்,

தவிர்ப்பதற்கான வழியை கண்டுபிடிப்போம்...  

===========================================================
ஆயிரம் நண்பர்களை உருவாக்குவது ஒண்ணும்  பெரிய அதிசயம் அல்ல.

ஆயிரம் பேர்  எதிர் கருத்து கூறும்  போது உங்களுடன் கைகோர்க்க  ஒரு நண்பன் இருந்தால் அதுவே அதிசயம்.  

============================================================

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


மூணு நாள ஜிந்திக்குறேன் இந்த படத்துக்கு என்னானு கமன்டலாமுன்னு
ம்ஹும்.......ஒண்ணுமே தோணலயே..... (சரக்கு தீர்ந்துடுச்சோ....)     




அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்




படங்கள்: நன்றி கூகிள்

Monday, December 17, 2012

திறமைசாலிங்க....

வணக்கம்

15.12.2012 அன்று எனது பிறந்தநாளுக்கு என்னை வாழ்த்திய பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்:




இப் படங்கள் வரைந்தவர் திறமைசாலிங்கோ இது உண்மையான படம் அல்ல:    பெயிண்டிங்  ஆர்ட்:








ஐ கேருக்கு போகணும் போலேயே




எப்பூடீ:

ஒண்ணும் சொல்றதுக்கில்ல





மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

தவறு என்பது தவறு தான் அது  யாரு செய்தாலும்

சரி என்பது சரிதான் யாரும் செய்யாமல் நீங்கள் மட்டும் செய்தாலும். 

============================================================

உங்கள்  மீது நம்பிக்கை வரவேண்டுமா?

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்

நேர்மையாக நடக்க வேண்டுமா?

உண்மையாக நடந்து  கொள்ளுங்கள்

உண்மையாக நடக்க வேண்டுமா?

நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். 



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


வீட்டிலோ, விடுதியிலோ தனியா இருக்காங்களாமா...

ஓவரா ஆடுனா ஒடம்புக்கு ஆகாதுங்க 




விரைவில் வர இருக்கும் பதிவு : -  அ........ஆ   (ழகும் பாசமும்)

படங்கள் : நன்றி கூகிள் மற்றும் முகநூல்

Monday, September 10, 2012

எப்படி எல்லாம் பதிவ தேத்துறாங்..

வணக்கம்


உன்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
உன்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
என்னை போல.


கண்ணில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில்  இடம் பிடித்த அனைத்தும் அருகில்  இருப்பதில்லை
இது தான் வாழ்க்கை.


நீ தேடும் போது  உன் அருகில் நான் இல்லை ஆனால்,
நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன்
உன் அன்பு நிஜம் என்றால்


மேலே படித்தவை எனக்கு வந்த  குறுஞ்செய்திகள் (SMS)... (எப்படி எல்லாம் பதிவ தேத்தற -அய்....தலைப்பு)


அலைக்கு குதிரையின்  வேகம்

குதிரைக்கு அலையின் வேகம்

ஒ...அலைக்குதிரையோ....




 முகநூலில் பெண் போடும் ஸ்டேடஸ்:

நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.

லைக் 91

கமெண்ட்:
  1. அவேசொம்
  2. அடுத்த வாட்டி நாம சேர்ந்து போலாம்
  3. என்னை விட்டு தனியாவா போன
  4. வாவ் - அருமையான அனுபவம்
  5. என்ன ஒரு அற்புதமான அனுபவம்

முகநூலில் ஆண்  போடும் ஸ்டேடஸ்:

நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.

லைக் 0

கமெண்ட்:
  1. இதே பொழப்ப போச்சுடா உனக்கு
  2. அதுக்கு நாங்க என்ன பண்றது
  3. ஓசில பயணம் அதையும் ஸ்டேடஸ் வேற போடுறீயா
  4. அடேய் நாதாரி பேசாம, அந்த பஸ்ஸில் கண்டக்டர் ஆயிடு.
  5. மவனே அப்படியே போயிடு..திரும்ப வராதே


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

சந்தோசமான வாழ்க்கைக்கு  ஏழு வழிகள்
  1. நேரம் தவறாமை
  2. எளிமை
  3. ஏமாத்த கூடாது
  4. எதிர்பார்ப்பை குறைக்கவும்
  5. கடின உழைப்பு
  6. எப்பவும் முகத்தில் புன்னகை
  7. நல்ல உறவுகள்/நட்புகளை உடைக்காதே  

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இதுக்கு எந்த மாதிரி கமன்டலாம்னு யோசிச்சேன்.....சேன்.

பிங்கி பிங்கி பாங்கி....
இதழோ  மொத்த வங்கி 
 கரு விழியில் மயங்கி 
சொல்ல வந்தேன்  தயங்கி..
பிங்கி பிங்கி பாங்கி

போடா மங்கி (மைன்ட் வாய்ஸ்...கேக்குதுப்பா)