நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, March 11, 2012

திருமணம் Vs மறுமணம் கலாட்டா கும்மி



1. திருமணம் என்பது:

உணவகம் செல்கிறிர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று  நீங்கள் முடிவு பண்ணி ஆர்டர் பண்ணனும் அதை விட்டுட்டு  மற்றவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து  அதேயே ஆர்டர் செய்வது?!.  
----------------------------------------------------------------------------

2. ஆண்:  நீண்ட ஆயுள்  பெற ஏதாவது வழி இருக்கா?


டாக்டர்: கல்யாணம் பண்ணிக்குங்க.

ஆண்: கல்யாணம் பண்ணினால்... முடியுமா?

டாக்டர்:  இல்ல, நீண்ட ஆயுள் வேணும் என்ற எண்ணம் வராது.
-----------------------------------------------------------------------------

3..கல்யாணத்தின் போது தம்பதிகள் இருவரும் கைகளை கோர்த்து இருப்பது ஏன்?


அது ஒரு சம்பிரதாயம்... எப்படின்னா இரண்டு  குத்து சண்டை வீர்கள் சண்டைக்கு முன் கை குலுக்கி கொள்வார்களே அது போல்
-----------------------------------------------------------------------------

4..மனைவி: செல்லம் இன்னைக்கு நமக்கு (திருமணம்) ஆண்டு விழா...நாம் என்ன செய்யலாம்?


கணவன்: இரண்டு நிமிஷம் அமைதியாக இருப்போமா?
-----------------------------------------------------------------------------

5. கடவுளை புரிந்து கொள்ள முடியல... பின்ன, அழகான பொண்ணுகளை படைத்தும்  விட்டு அவர்களை மனைவியா திருப்பி விடுறானே
-------------------------------------------------------------------------------

6. பண பரிவர்த்தனைகள் மின்னணு வங்கியை விட வேகமாக நடக்கும்னா அதுக்கு பெயர்  கல்யாணம் .


--------------------------------------------------------------------
7. கேர்ள் பிரெண்ட்ஸ் சாக்லேட் மாதிரி எப்பவும்  சுவையா இருக்கும்.

லவர்ஸ் பிஸ்ஸா  மாதிரி  ஹாட் மற்றும்  காரமாக அடிகடி சாப்பிடுவது.

கணவன்  சாதம் மாதிரி வேறு வழி இல்லாத போது சாப்பிடுவது.
----------------------------------------------------------------------------------

8. நாய்கள் ஏன் திருமணம் புரிவதில்லை?


அதுங்க ஏற்கனவே நாய் வாழ்க்கை  வாழுதுங்க.
-------------------------------------------------------------------------------

9. மறுமணம் புரிந்து கொள்ள சட்டம் மறுப்பதேன்?
 
ஏன்னா..., ஒரே குற்றத்து  இரண்டு முறை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை.




விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


கடலோரம் வீசும் காற்று....

இரவிலே படுத்தால்  என் தூக்கம் என்னை திட்டும்

விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்.

Wednesday, March 7, 2012

மனைவியை சமாளிக்க சில டிப்ஸ்.


மகளிர் தின சிறப்பு பதிவு

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க : ஒரு சில டிப்ஸ்

உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.(நம்புங்க)
மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.

உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.

மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம். எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.


கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள். மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது மல்லிப்பூ அல்லது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள்.
நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.

மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


 மனசாட்சி: சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதான  கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்...

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


டீ.வியில் பவர் சோப்பு விளம்பரத்துக்கு வரும்.. இந்த புள்ள எம்புட்டு அம்சம்..னு, அழகுன்..னு மனசுக்குள்ளார  சொல்லிகோணும் அத வுட்டுட்டு வெளிபடையாக... அதுவும் மனைவியிடமே சொன்னால் கம்பெனி பொறுப்பாகாது.

Monday, March 5, 2012

கனவு காணுங்கள் என்...னே ஒரு வில்ல.த்..தனம்.


கனவு காணுங்கள். ஏன்? மனுஷ பிறவிதான்  தான் கனவு கானனுமா விலங்கு,பறவைகள் கானபடாதா?



விலங்குகளின் கனவுகள்










விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு  


என்....னே ஒரு வில்ல...த்...தனம்.



Thursday, March 1, 2012

பவர் ஸ்டார் ஆனந்த தொல்லையாக..வந்துட்டார்



மக்களே ரெடியா...வருகிறார் பவர் ஸ்டார்

ஆனந்த தொல்லை....



இதோ உங்களுக்கான,

உங்களுக்காக சிறப்பு காட்சி

http://www.youtube.com/watch?v=z16jBbX3iME&feature=player_embedded#!



எப்புடீ....


ஆண்னென்ன? பெண்னென்ன? உண்மையான வாழ்க்கை..


நட்பு என்பது காலை மாதிரி
நாள் முழுவது கூட  வராது
ஆனால் ஓன்று மட்டும் உறுதி
தூங்கி எழும் போதெல்லாம் வரும்
 நாளையும்  வரும் ஒவ்வொரு நாளும் வரும்
அடுத்த வருடமும்  வரும்.
வாழும் நாட்கள்  தாண்டியும்  வரும். 

நட்பு என்பது வைரங்கள்  மாதிரி
அது உண்மையானதும் அரிதானதும்
பொய்யான நட்பு என்பது இலைகள் மாதிரி
அது எல்லா இடமும் சிதறி கிடக்கும் சிதறியும்  போகும்

வாழ்க்கை என்பது
6 நண்பர்கள்.. 2  பைக்குடன் ..  பெட்ரோல்  இல்லாமல்...இருப்பது.
வாழ்க்கை என்பது
புகைப்பவர்கள் 6 பேர்...ஒரு சிகரட்டுடன்   கடற்கரையில் அமர்ந்து இருப்பது.

வாழ்க்கை என்பது
எல்லாமே முட்டாள்தனமானது ஆனால் அறிவோடு ஏதோ நட்பு போல. 


விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு  

ரோஸ் பிறந்தது அழகுக்காக
மல்லிகை பிறந்தது  மணத்துக்காக
நீ பிறந்தது எனக்காகா 
நான் பிறந்தது உனக்காகா 
நீயும் நானும் பிறந்தது நட்புக்காகா. 



Wednesday, February 29, 2012

'விசயத்தில்' விவரமாக ஜெயிப்பது எப்புடீ???

இரண்டு விஷயங்கள் விவகாரமானது ஜெயிப்பது  மிகவும் கடினம்.....??

1. வேறு ஒருவர் தலையில் தங்கள் கருத்துக்கள் திணிப்பது.


2. வேறு ஒருவர் பணத்தை தங்கள் சொந்த பையில் போட்டு கொள்வது.



இதில்

  
முதலாவதில் வெற்றி பெறுபவர் ஆசிரியர் என்று அழைக்கப்படுகிறது.

 
இரண்டாவதில் வெற்றி பெறுபவர்  தொழிலதிபர் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டிலும் வெற்றி பெறுபவர்  மனைவி என்று அழைக்கப்படுகிறது.

இரண்டிலும் தோல்வி பெறுபவர்  கணவன் என்று அழைக்கப்படுகிறது!



விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு


(கோரிக்கை ஏற்று... மூஞ்சிய மட்டும் அல்ல முழுசும் ஹி ஹி ஹி)

இந்த சீனு போதுமாய்யா......இன்னும் கொஞ்சம் வே...ண்...ணு...மா..? (அவ்வ்வ்வ்வ்வ்)



Tuesday, February 28, 2012

உலக அழகியே.......!

உலகில் உள்ள அழகான 16 பெண்களை தேர்வு செய்து 4 அணிகளாக பிரித்து  ஒவ்வொரு அணிகளில் இருந்து ஒரு அழகான பெண்ணை தேர்வு செய்து அதிலிருந்து ஒரு மிக அழகான பெண்ணை தேர்ந்தெடுப்பது??..


எப்புடீ????

இப்புடித்தான்..
 
அணி 1







அணி 2







அணி 3







அணி 4






அணிகள் 1 + 2 + 3 + 4

(நான்கு அணிகளில் தேர்வு செய்யப்பட்ட அழகிகள்)





உலகில்.. மிக அழகான பெண்களை படங்களில் படைக்க கற்பனை வளமும், போட்டோஷோப் டெக்நிக்கும் தெரிந்தாலே போதும்.

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


திட்டங்கள் (புராஜெக்ட்) தாமதம் ஆகும் காரணம்.. இப்புடீ...யா...அவ்வ்வ்வ்வ்வ்
நன்றி: படைப்பாளி + கூகிள்


 

Saturday, February 25, 2012

ஆனந்தம் தொல்லை... பவர் ஸ்டார்....ஆ!.கலாம்.


திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப் பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

மன அழுத்தம்


ம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம், பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது.

குடும்ப பிரச்சினை



றவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும்.

போதை ஆபத்து



து குடித்துவிட்டு போதையில் மிதப்பது, கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது.

உறக்கக் குறைபாடு


ணிச் சூழல், அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது, உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது. எனவே சரியான அளவில் பணி நேரத்தையும், ரொமான்ஸ்க்கான நேரத்தையும் திட்டமிடவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தை பிறந்திருக்கா?



சிறு குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளி ஏற்படும் காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

ரொம்ப குண்டாயிட்டோமோ?


திருமணத்தில் பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுவும் கூட இடைவெளிக்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்பு குறைவதும் தம்பதியரின் இடைவெளிக்கு காரணமாகிறது.

மோனோபஸ்

பெண்களுக்கு மோனோபஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போல உணர்வர். வலி, வறட்சி போன்றவைகளினால் உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இதுவும் தம்பதியரிடையே வில்லனாக புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.



னவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையை புரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும். பவர் ஸ்டாரா... வளமுடன் வலம் வரலாம்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சஞ்சனா சிங் - வளர்க்கும் செல்லப் பிராணி அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகள்.

சமீபத்து பேட்டியில் சிந்திய முத்துக்கள்: முயல்கள் ரொம்ப மென்மையானவை. ரொம்ப அற்புதமான பாசப் பிராணிகள்.  எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், ஒரு முறை இந்த முயல் குட்டிகளை தடவிப் பார்த்தாலே, யோகா பண்ண மாதிரி ஒரு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துடுவேண்.


நன்றி - படங்கள் அனைத்தும் கூகிள் தயவுங்க.
 

உள்குத்து...??? உள்குத்து பதிவுதான்.

டாய்லெட் பேப்பர் சுற்றி இருக்கும் உள் அட்டையில் தான் இந்த கலை அம்சங்கள் வடிவமைக்கபட்டுள்ளது:

 :பார்க்கவும்:




விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



 அது  கைவண்ணம்  - இது கலைவண்ணம்

Thursday, February 23, 2012

துப்பாக்கி சூடு வீடியோ பரபரப்பு - படபடப்பு காட்சிகள்


இது நடப்பது  கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள  சவூதி அரேபியாவில் என்றால்
 நம்புவீர்களா? அதிவேகமாக வரும் ஒரு காரில் இருந்து துப்பாக்கியால்
சுட்டபடி செல்கிறார்கள் இது   தொடர்ந்து நடைபெறுகின்றது,
மக்களும் வேடிக்கை பார்கிறார்கள்..  
பய புள்ளைங்க  காருக்குள் இருந்தும் வீடியோ எடுக்குதுங்க என்றால்
 பார்த்துக்கோங்க:

இதோ அதன் கிளிப் லிங்க்: