ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்களின் ரசிகர்கள் பங்களிப்பு பற்றி பேசியுள்ள சூர்யா, " என் மீது அன்பு கொண்டவர்கள் நிறைய பேர் சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள். என்னை நானாக ஏற்றுக் கொண்டவர்கள். என்னைப் பற்றியும் என் படங்களைப் பற்றியும் அவர்கள் செய்யும் பதிவேற்றம் ஆச்சர்யப்பட வைக்கிறது.
அநாகரீகமாக எழுதுபவர்களும் இத்தகைய சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள். சுவற்றில், தியேட்டரில் கழிவறைகளில் இப்படிப்பட்ட கிறுக்கல்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அத்தகைய கிறுக்கல்களை இப்படிப்பட்ட சமூக வலைதளங்களில் போட அவர்கள் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்.
பெருவாரியான மக்களைச் சென்றடையும் ஒரு சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களைத் திட்டுவதாலோ, குறை சொல்வதாலோ அவர்களின் வெற்றியை நீங்கள் பறித்துவிட முடியாது.
திரைபடத்தை பார்த்துவிட்டு தங்களது விமர்சனத்தை சொல்வதில் தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் நடிகரைப் பற்றியோ அவரது குடும்பத்தைப் பற்றியோ அவதூறாக பேசுவது சரியல்ல.
என்னைப் பொருத்தவரை இம்மாதிரியான அவமதிப்புகள் உண்மையான கலைஞர்களை பாதிக்காது. சமூக வலைதளங்களில் இப்படி தரக்குறைவாக எழுதுவோர் இதை புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment
இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...