இதய நோயாளிகளின் ஸ்டெம் செல்களை எடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப் பதாக அமெரிக்காவின் லூயிஸ்வில்லா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்ட 16 நோயாளிகளுக்கு அவர்களின் ஸ்டெம் செல்களை எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஓராண்டுக்குப் பின்னர் அவர்களின் இதய செயல்பாடு 12 சதவிகிதம் வரை மேம்பட்டிருந்தது. இந்த ஆராய்ச்சி இப்போது ஆரம்பநிலையில் உள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள் வதன் மூலம் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்ட முடியும்' என்று லூயிஸ்வில்லா பல்கலைக்கழக விஞ்ஞானி ராபர்டோ போலி தெரிவித்தார். நோயாளிகளிடமிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவற்றை 4 மாதங்கள் ஆய்வகத்தில் வளர்க்கிறோம். அதன் பின்னர் தனிச் சிறப்புக்கருவி மூலம் அவற்றை நோயாளியின் பாதிக்கப்பட்ட இதயப் பகுதியில் செலுத்துகிறோம். இந்தச் சிகிச்சை மருத்துவத் துறையில் மிகச் சாதனையாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவில் 10 கோடி இதய நோயாளிகள் இருப்பதாகவும், உலக இதய நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்றும் அண்மையில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment
இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...