நடிகைகள் பொதுவாக வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வழக்கம். அதில் சிலர் அதிக ஈடுபாடுகாட்டுவார்கள். தான் வளர்ப்பது மட்டுமல்லாது தன்னை சார்ந்தவர்களிடமும் வளர்க்கச் சொல்வார்கள். தற்போது நடிகைகளுக்கு நாய்க்குட்டிதளின் மீது பிரியம் ஏற்பட்டுள்ளது.
திரிஷா வுக்கு நாய்க்குட்டிகள் மேல் அதிக பிரியம். வீட்டில் நிறைய நாய்க்குட்டிகள் வளர்த்து வருகிறார். திரிஷாவின் நாய் பாசத்தை உணர்ந்து நிறைய பேர் தெரு நாய்களை பிடித்து போய் தேனாம்பேட்டை செனடாப் ரோட்டில் உள்ள திரிஷா வீட்டு முன்னால் விட்டுப் போகின்றனர். அவற்றை சளைக்காமல் எடுத்து போய் குளிப்பாட்டி சுத்தம் செய்து நெருங்கியவர்களிடம் அணுகி வளர்க்க கொடுக்கிறார்.
இதுபோல் ஸ்ரேயாவுக்கும் நாய்க்குட்டிகள் மேல் பிரியம் ஏற்பட்டு உள்ளது. போபால் அருகில் காரில் படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்த போது ரோட்டோரம் தண்ணீரில் தத்தளித்தப்படி கிடந்த ஒரு நாய்க்குட்டியை பார்த்தார். உடனே காரை நிறுத்தி அந்த நாய்க்குட்டியை எடுத்தார்.
அதன் உடல் முழுவதும் புண்ணாக இருந்தது. உடனே அதை கால்நடை ஆஸ்பத்திரிக்கு தூக்கிப்போய் மருத்துவ சிகிச்சை அளித்தார். பின்னர் வீட்டுக்கு எடுத்து சென்றார். அந்த நாய்க்குட்டிக்கு துரு என பெயர் வைத்துள்ளார். படப்பிடிப்புக்கும் அதை எடுத்துச் செல்கிறார். இது ஒரு வகையில் செல்லப்பிராணிகளின் மீது அவர்கள் காட்டும் அன்பையும் வெளிப்படுத்துகிறது, அத்துடன் அவர்களுக்கு ஒரு விளம்பரத்தையும் கொடுக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மங்காய் என்பது இதுதானோ?
No comments:
Post a Comment
இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...