நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, October 20, 2011

நடிகையோடு அதுவா...!

சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன் படத்தின் இசைவெளியீடு பிரமாண்டமான முறையில் நடந்தது. விழாவுக்கு பல நடிகைகள் வந்திருந்தும் படத்தின் நாயகி பூர்ணா வரவில்லை. அதே போல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் வரவில்லை.

ஆனால், பூர்ணா வராதது தான் விழாவுக்கு வந்த பலரால் பேசப்பட்டது. அதை தொடர்ந்து, படம் நடித்து முடிப்பதற்குள் படாதபாடு படுத்திவிட்டார் இயக்குனர், அதனால் தான் பூர்ணா வரவில்லை என்று செய்திகள் எழுதப்பட்டது. 

இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த, ‘வித்தகன்நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், நான் நடிகைகள் எல்லோரையும் மிகவும் மதிப்பேன். நடிகை தொழில் என்பது அழகான ஒரு விஷயம். நம்முடைய விருப்பத்திற்கு எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் இடம் கொடுப்பாங்க, ஆனால் அவர்கள் எல்லோரையும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடியாது. நடிப்பது என்பது ஒரு ஸ்பெஷலான விஷயம்.

நான் நடிகைகளிடம் நடிப்பை தவிர எந்த விஷயத்தையும் எதிர்பார்ப்பதில்லை. இதை உண்மையாகவே சொல்கிறேன். ஆசாபாசங்களை நிறைவு செய்துகொள்ள வசதிகள் நிறைய இருக்கிறது. அதை போய் ஒரு நடிகையிடம் எதிர்பார்ப்பது என்னை மாதிரி இந்த தொழிலை கௌரவமாக நேசிக்கிற இயக்குனர்களிடம் இல்லாத ஒரு விஷயம்.

இதை நிறைய இயக்குனர்கள் சார்பாகவே சொல்கிறேன். நடிகையிடம் நடிப்பை தவிர மற்ற விஷயங்களை எதிர்பார்த்தால் அவர் ஒரு சரியான இயக்குனர் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

அந்த மாதிரி ச்சீப்பான அபிப்பிராயம் எனக்கு கிடையாது. இதை அந்த நடிகையிடமே கேட்டு தெரிந்துகொள்ளளாம். பூர்ணாவை ஷூட்டிங்கில் யாரோ கையை பிடித்து இழுத்த மாதிரியும்... இல்லை, இழுக்க முயற்சி செய்த மாதிரியும்... இந்த செய்திகள் ரொம்ப ரொம்ப அறுவருப்பாக இருக்கிறது.

அப்படிப் பார்த்தால் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் தான் விழாவுக்கு வரவில்லை. அவரையும் நான் கையை பிடித்து இழுத்தேனா என்ன? பூர்ணா வராததால் வித்தகன் விழாவுக்கு எந்த பாதிப்புமே இல்லை என்றார்.  

Wednesday, October 19, 2011

ஆண்களை கடத்தி பாலியல் சகோதரிகள் கைது

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சகோதரிகள் 3 பேரை பொலீசார் கைது செய்தனர்.
ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர்கள் ரோஸ்மேரி சாக்விசிரா(28), சோபியா(26), நெட்காய் கோக்வாரா(24). இவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவர். அவர்கள் ஆண்களைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் காரில் சென்று கொண்டிருந்த சகோதரிகள் 19 வயது வாலிபருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். 3 பெண்கள் லிப்ட் கொடுத்ததால் சந்தோஷமாக காரில் ஏறிய வாலிபரை தங்கள் வீட்டுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.

அதேபோல ராணுவ வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று தங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் பொது மக்களை காக்கும் பொலிஸ் ஒருவரையே கடத்திச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களின் செயல் குறித்து பொலீசாருக்குத் தெரிய வரவே அவர்களை பொலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறல்

கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்துகொண்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை நடிகர் நவ்தீப்பும் நண்பர்களும் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக நவ்தீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அறிந்தும் அறியாமலும், இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன் அஆஇஈ, சொல்லச்சொல்ல இனிக்கும் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நவ்தீப். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.

ஐதராபாத் அருகே மாதாபூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நவ்தீப், அவரது நண்பர் ஜெயவர்த்தன், அவர்களது கேர்ள் பிரெண்ட்கள் உள்ளிட்டோர் சென்றனர். ஓட்டலில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் இருந்தனர்.

அவர்கள் நவ்தீப்பின் கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்து அவர்களை தேடினார் நவ்தீப். அதற்குள் அவர்கள் அருகே உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றுவிட்டனர். நவ்தீப் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நவ்தீப்பின் நண்பர் ஜெயவர்த்தன் ஒரு மாணவரின் செல்போனை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். இதையடுத்து மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே மாதாபூர் போலீசில் புகார் அளித்தனர். நவ்தீப், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெ.வுக்கு திடீர் ஆதரவு

காவிரி நதி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதி நீர்ப் பங்கீடுபற்றி நாம் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நடுவர் மன்றம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதித் தீர்ப்பினை காவிரி நதி நீர் நடுவர் மன்றம் நமக்கு 2007ல் வழங்கியது.

அதன்படி நமக்கு ஆண்டுதோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு, சில, பல ஆண்டுகளில் தவறுவதும், கிருஷ்ண சாகர், கபினி போன்ற அணைகள் நிரம்பி வழியும் போது அணைகளைப் பாதுகாக்க, தண்ணீரைத் திறந்து விடுவதும் அதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்புவதும், அந்த கணக்கினையும் காட்டி, தர வேண்டிய பாக்கி நீரைக் கணக்கிட்டு கர்நாடகம் கூறுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

2007ல் வெளியிட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிடாமல் இருப்பது மிகவும் வியப்பையும், வேதனையையும் நமக்கு அளிக்கிறது. மத்திய அரசு இதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து, கடந்த 4 ஆண்டு காலம் காலதாமதம் செய்துவருவது ஏன் என்று புரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு நாம் சலுகை கேட்கவில்லை. நீதிமன்ற ஆணையை சட்டப்படி அரசிதழில் வெளியிட வேண்டிய கடமையை ஏன் செய்யவில்லை என்றுதான் மத்திய அரசிடம் நமக்குள்ள உரிமையை வற்புறுத்துகிறோம்.

முதல்வர் ஜெயலலிதா இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி வற்புறுத்தியிருப்பதற்கு அரசியல் கட்சி கண்ணோட்டமின்றி தமிழ்நாட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து நம் ஒன்றுபட்ட ஒருமித்தகுரலை எழுப்பிடத் தவறக் கூடாது.

கர்நாடக அரசியலில் ஒரு கட்சியை எதிர்த்து மற்றொரு கட்சி நடத்தினாலும், காவிரி நதி நீர்ப் பிரச்சனை போன்ற அவர்களது மாநிலப் பிரச்சனைகளில் ஒரே அணியில் நின்று குரல் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் மாத்திரம், இதுபோன்ற பொது உரிமைப் பிரச்சனைகளில் ஏன் ஒற்றுமை இல்லை?.

அரசியல் பார்வைகளால் ஒருவரை மற்றொருவர் விமர்சிப்பது- வாதங்கள்- எதிர்வாதங்களுக்கே நமது நேரம் செலவழிக்கப்பட்டு, ஒற்றுமையே காணாமற் போய்விடும் வேதனையான நிலை - இனி மேலாவது இருக்கக்கூடாது.

ஆளுங்கட்சியும் முதல்வரும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவினையும் திரட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர, கடந்த கால குற்றச்சாட்டுகளைப் புதுப்பித்து, பொது எதிரிகள் மகிழும் வண்ணம் நமது நதிகள் உரிமை பறிபோக இடமளிக்காது சிறப்பாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அரசு எடுக்கும் நல் முயற்சிகளை திராவிடர் கழகம் வரவேற்று, விரைந்து செயலாக்க துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

Tuesday, October 18, 2011

ஒரு கல் ஒரு கண்ணாடி

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. ஹன்சிகா நாயகியாக நடிக்க ராஜேஷ் இயக்கி வருகிறார். படத்தின் பெயரை சுருக்கி OK OK என்றே இணையதளங்களில் குறிப்பிடப்படுகிறது.

இப்படத்தின் FIRST LOOK சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் 'ஏழாம் அறிவு' படத்துடன் வெளிவர இருக்கிறது. படத்தின் பாடல்கள் இன்னும் தயார் ஆகாத காரணத்தினால் ' ஒரு கல் ஒரு கண்ணாடிபடத்தின் TEASER மட்டுமே வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'வேலாயுதம்' படத்துடனும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் TEASER வெளிவர இருக்கிறது. விஜய்யும் உதயநிதி ஸ்டாலுனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது இணையத்தில் கூறியிருப்பது " ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் TEASER விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'வேலாயுதம்' படத்துடனும் வெளிவர இருக்கிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.

தீபாவளி தினத்தன்று  ' வேலாயுதம்', 'ஏழாம் அறிவுஎன இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களுடன் தான் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் TEASER வெளிவர இருப்பதால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஓட்டுப் போடவில்லை!

மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாகவும், கமல்ஹாசன் வெளிநாடு போய் விட்டதாலும் ஓட்டுப் போட வரவில்லை.

எந்தத் தேர்தலையும் தவற விடாமல் ஓட்டுப் போட்டு விடுவது இந்த இரு முன்னணி நட்சத்திரங்களின் வழக்கமாகும். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர்கள் இருவரும் ஓட்டுப் போட வந்தபோது மீடியாக்களிடம் சிக்கி திணறிப் போய் விட்டனர்.

இந்த நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் இருவருமே ஓட்டுப் போடவில்லை.

ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் ஓட்டுப் போடவில்லை. அவரது குடும்பத்தினரும் யாரும் ஓட்டுப் போட்டதாக தெரியவில்லை.

அதேபோல கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயிருப்பதால் வரவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர்கள் பிரசன்னா, எஸ்.வி.சேகர், நடிகை சினேகா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இன்று வாக்களித்தனர். மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாகவும், கமல்ஹாசன் வெளிநாடு போய் விட்டதாலும் ஓட்டுப் போட வரவில்லை.

எந்தத் தேர்தலையும் தவற விடாமல் ஓட்டுப் போட்டு விடுவது இந்த இரு முன்னணி நட்சத்திரங்களின் வழக்கமாகும். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர்கள் இருவரும் ஓட்டுப் போட வந்தபோது மீடியாக்களிடம் சிக்கி திணறிப் போய் விட்டனர்.

இந்த நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் இருவருமே ஓட்டுப் போடவில்லை.

ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் ஓட்டுப் போடவில்லை. அவரது குடும்பத்தினரும் யாரும் ஓட்டுப் போட்டதாக தெரியவில்லை.

அதேபோல கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயிருப்பதால் வரவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர்கள் பிரசன்னா, எஸ்.வி.சேகர், நடிகை சினேகா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இன்று வாக்களித்தனர்.


உச்சநீதி மன்றத்தில் முன்கூட்டியே வரவழைக்கப்பட்ட காவிரி வழக்கு: ஜெயலலிதா திட்டம்தான் என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் உத்தரவு தொடர்பாக தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு இன்று அவசரம் அவசரமாக விசாரணைக்கு வரவைக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான இந்த மனுவை ரவீந்திரன், பட்னாயக் மற்றும் கோகலே ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது. இந்த மனு நாளையே விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் என முன்னதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வைத்தியநாதன் கேட்டிருந்தார். ‘ஏன் இந்த திடீர் அவசரம்…. என்ன பின்னணி? என்று நீதிபதி ரவீந்திரன் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
உடனே தமிழக அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், “இதற்கான அவசர அவசியம் இப்போது வந்திருப்பதாக தமிழக அரசு கருதுவதால் நாளைய விசாரணையில் இந்த வழக்கு பட்டியலிடப்பட வேண்டும், என கூறியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின் போது தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திங்களன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், வேளாண் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணிச் செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேறே்றனர்.

துரிதப்படுத்துவது ஏன்?

இந்த வழக்கு அக்டோபர் 3 வது வாரத்தில்தான் வரவிருந்தது. ஆனால் ஒரு வாரம் முன்னதாகவே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தியுள்ளது. இந்த அவசரத்தின் பின்னணி குறித்து பலவாறு பேசப்படுகிறது.
இந்த வாரத்தில் (அக்டோபர் 20-ம் தேதி) சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருக்கு போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் காவிரி விவகாரம் கிளறப்படுவதன் மூலம், பெங்களூரில் அமைதியற்ற சூழல் உருவாகக் கூடும்.
அதைப் பயன்படுத்தி, விசாரணைக்கு போகாமல் ஜெயலலிதா தவிர்த்துவிட வாய்ப்பு கிட்டுமல்லவா… சென்சிடிவ் பிரச்சினையான காவிரி வழக்கு விசாரணையை முன்கூட்டி கொண்டு வர இதுவே முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

என்ன ஒரு வில்லத்தனம்!