நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, February 8, 2012

மணப்புரம் பைனான்ஸ் - சட்டவிரோதம்


மலையாளிகளின் நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் சட்டவிரோதமாக டெபாசிட்டுகளை வசூலிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இனி மணப்புரம் பைனான்ஸ் அல்லது மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் நிறுவனங்களின் பெயரில் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளை வசூலிப்பது குற்றம்
, கடும் தண்டனைக்குரியது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்
, "விபி நந்தகுமாரை எக்ஸிக்யூடிவ் சேர்மனாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் பைனான்ஸ், தனது அனைத்து கிளைகளிலும் பொதுமக்களிடமிருந்து டெபாசிட் வசூலிக்கிறது. அதற்கு, மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் எனும் பெயரில் ரசீதும் தருகிறது. மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் என்பது விபி நந்தகுமாருக்கு முழுமையாக சொந்தமான நிறுவனம். இது கார்ப்பரேட் சட்டப்படி பதிவு பெறாதது.

ரிசர்வ் வங்கி சட்டம் 45-
S படி இது குற்றச் செயலாகும்.பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். மீறி டெபாசிட் வாங்கினால் மணப்புரம் பைனான்ஸ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என அறிவித்துள்ளது.


கேரளாவின் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் பைனான்ஸ் தங்க நகைக் கடன்களைத்தான் பிரதானமாக வழங்குகிறது (இருக்கிற நகை நட்டுகளை அடமானம் வைக்க சொல்லி விக்ரம் அட்வைஸ் பண்ணுவாரே... அந்தக் கம்பெனிதான்!). ஆரம்பத்தில் வங்கியல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்திருந்த மணப்புரம் பைனான்ஸ்
, 2011-லிருந்து 'டெபாசிட் பெறாத வங்கியல்லாத நிதி நிறுவனம்' என்ற பிரிவின் கீழ் மாற்றிக் கொண்டது.

ஆனாலும் டெபாசிட் பெறுவதை தொடர்வதாக ரிசர்வ் வங்கிக்கு ஆதாரங்களுடன் தகவல் கிடைத்ததால்
, இந்த எச்சரிக்கையை ரிசர்வ் வங்கி விடுத்துள்ளது.

ஐஸ்வர்யா - சமீரா ரம்மியமாக இருக்கு!?



லவ்ன்னா சும்மாவா - காதலில் வலி சுகமானது
 
காஸ்ட்யுமர் ஆகி இருக்கலாமோ?? ஹிம்...


விபத்து,  ஏன் ஏற்படுதுன்னு இப்ப புரியுதுங்களா...



அம்மாவா ஐஸ்வர்யாபச்சன் 




ரொம்ப அழகா ரம்மியமாக இருக்கு - இடம் தெரியவில்லை



 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



உன்னை மதிச்சி Tag பண்ணுனா, நீ என்ன பண்ணனும்?
சொல்லு செல்லம் நீ என்ன பண்ணனும்??
ஒன்னு கமெண்ட் பண்ணனும் இல்ல லைக் பண்ணனும்!!
அத விட்டுட்டு ஏன் untag  பண்ணுற? இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்.
நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா????
வருசத்துக்கு ஒரு தடவ லாக்-இன் பண்ணுற உனக்கே, அவளோ அதப்புன்னா, டெய்லி லாக்-இன் பண்ணுற எங்களுக்கு எவ்ளோ அதப்பு இருக்கும்!!!
ஒழுங்கா கமெண்ட் பண்ணு இல்ல மூஞ்சில புரான் விட்ருவேன்.


Monday, February 6, 2012

உடலுக்கு நல்லதாம்...

நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு. நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.


இதனிடையே தினந்தோறும் இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தநோய் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இதயநோய் பாதிப்பும் ஏற்படாது என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உருளைக்கிழங்கை வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட வேக வைத்து உண்ணவேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர். ஆய்வின் போது மதிய உணவு நேரத்தில் தினமும் 100 கிராம் அளவு உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரத்திலும் கொடுக்கப்பட்டது. ஒருமாதம் தொடர்ந்து உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்களின் உயர்ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

உடல் எடை அதிகரிக்காதது மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களினால் உருளைக்கிழங்கானது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

Sunday, January 29, 2012

அரசியலில் இது எல்லாம் சாதரணமப்பா.

எல்லோருக்கும் வணக்கம்


 

ஒரு நிமிஷம்....இந்த சூழ்நிலையில் நீங்களா இருந்தால்.???


எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா...


யானை:  அந்த பயம் இருக்கட்டும்..!  
ஓட்டுனர்:  தள்ளிவிட்டாலும் சட்டினிதான்.


பாம்பன் பாலம்:  ரயில் பாலம் மற்றும் தரைவழி பாலம்    பார்த்து இருப்போம்....இரண்டும் சேர்ந்தாற்போல்...



கட்டுமான தவறு..  ஹிம்....என்னத்தை சொல்ல


  கட்சி கூட்டம்?! இது எல்லாம் சாதரணமப்பா  




விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு


யாரு? யாரு??

Wednesday, January 25, 2012

ஸ்ருதி கரெக்டா இருக்கு - விளையும் பயிர் முளையிலே தெரியும்

வருங்கால பயில்வான் வாழ்த்துக்கள் அம்பி வாழ்த்துக்கள்

 அழகா இருக்கு அருவி.. நீர்வீழ்ச்சி உண்மையா இல்ல கிராபிக்ஸா # சிரியஸ் டவுட்டு

கற்பனைக்கும் எல்லை இல்லை தான் - வாழ்த்துக்கள் யு கண்டிநியூ

விளையும் பயிர் முளையிலே தெரியும்

பெருசை பார்த்தா பெரியமனுசன் மாதிரி தோணுது பட்  பார்வையில் கோளாறு

iPAD நிலைமையை பாரு...

ரிஸ்க் தான் ஓசி பயணத்தில் இது எல்லாம் சாதரணமப்பா

நண்பர்களுடன் உற்சாகபானம் அருந்தி சுதி ஏற்றுவது யாருன்னு...அட கப்புன்னு புடிச்சிடியலே.


செம காமடி போங்க

விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு


அழகு மயில்.. மேக்அப்புக்கு முன்னாடியா? பின்னாடியா? # டவுட்டு 


நடிகை திரிஷாவுக்கு பணம் வேண்டாமாம் சும்மாவே வருவாங்கலாம்.


அமெ‌ரிக்க தமிழ் சங்கத்தின் 25வது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. இதில் த்‌ரிஷா கலந்து கொள்கிறார்.


சொந்த மகளின் காது குத்துக்குக்கூட காசு கொடுத்தால்தான் வருவேன் என்பவர்கள்தான் நமது சினிமாக்காரர்கள். விதிவிலக்கு ஒன்றிரண்டு இருக்கலாம். எந்த விழாவுக்கு என்றாலும் பயணப்படியுடன் லம்பாக ஒரு அமௌண்ட் வெட்டுவது இவர்களின் வாடிக்கை.



அமெ‌ரிக்க தமிழ் சங்கம் த்‌ரிஷாவை சீஃப் கெஸ்டாக அழைத்தபோது, பெ‌ரிய தொகை ஒன்றை அவர் கேட்பார் என்றுதான் நினைத்தார்களாம்.
ஆனால் த்‌ரிஷாவோ, இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்குப் பெருமை, அதனால் எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்றிருக்கிறார்.

 தமிளு தமிளு என்று பேசும் நடிகர்களைவிட இவர் எவ்வளவோ மேல்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஹல்லோ...எஸ் குஷ் மீ இவங்களும் த்ரிஷா தான் ப்ரீயா ரிலாக்ஸ்சா பீச்ல் இருக்கும் பொது எடுக்கப்பட்ட படம் ( யாரு எடுத்தா? எந்த பீச்? அப்படி எல்லாம் கேட்கபடாது ஒக்கே.)

16 வயது பெண் தனியாக வந்தால்!? உற்சாகத்துடன் வரவேற்பு.




நெதர்லாந்தைச் சேர்ந்த லாரா டெக்கர் என்ற 16வயது பெண் உலகம் முழுவதையும் படகு மூலமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.


இவர் தனது 14வது வயதில் ஒரு படகு மூலம் தனியாக உலகை சுற்றி வர விரும்பினார். அதற்கு நெதர்லாந்து அரசு சம்மதிக்கவில்லை. எனவே அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து குழந்தைகள் நல மையத்தின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமையவே கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி கிப்ரால்டார் என்ற இடத்தில் இருந்து 38 அடி நீள குப்பி என்ற எந்திர படகின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.



8 மாதங்கள் கழித்து கரீபியன் கடலில் உள்ள செயின்ட் மார்டினை வந்தடைந்த டெக்கரை அவரது பெற்றோர் உட்பட சுமார் 500 பேர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தற்போது உலகை தனியாக சுற்றி முடித்த இளம் வயது வீராங்கனை என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

ஒரு பெண் அழுதால்
அதுக்கு பல காரணங்கள்
இருக்கலாம்.
ஆனால் ஒரு ஆண் அழுதால்
அதுக்கு ஒரே காரணம் தான்
இருக்க முடியும்.
 பெண்.



இம்புட்டு அழகா இருந்தா...!!!???


Monday, January 23, 2012

பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும்

உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப இன்றைக்கு நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அழகையே மாற்றிவிடும். அது ஆபத்தானதும் கூட. எனவே எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம் என்பதை தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.


நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளையும், சிறியவர்கள் சின்னநகைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். சீரான நடுத்தர நகைகளை அணியலாம். அது இருவருக்குமே பொருத்தமானது.

வெரைட்டியா போடுங்க


எ‌ப்போது‌ம் ஒரே மா‌தி‌ரியான தங்க நகைகளையே அ‌ணியாம‌ல், மு‌த்து, க‌ல் வை‌த்தது, த‌ங்க நகை எ‌ன்று ‌வித‌விதமாக நகைகளை வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். நா‌ம் செ‌ல்லு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் வகை‌க்கு‌ம், கால நேர‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்றபடி இ‌தி‌ல் ஒ‌ன்றை தே‌ர்வு செ‌ய்து அ‌ணி‌ந்து செ‌ல்லலா‌ம்.

பாரம்பரிய நகைகள்


பாரம்பரிய உடைகளுடன் பாரம்பரிய நகைகளை அணிந்தால் அது வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும். அவற்றுடன் எங்கு பார்த்தாலும் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. இவை விலை மலிவாக இருப்பதோடு அழகாகவும் ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் கூட அதிகம் கவலைப்படத் தேவையில்லை.


ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

பகலில் குறைவான நகை

காலை நேரங்களில் நகைகளை குறைவாகவும், இரவில் அதிகமான நகைகளையும் அணியவேண்டும் அப்பொழுதுதான் நகையின் அழகானது அணிபவருக்கு கூடுதல் அழகு தரும்.


உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது. எனவே அதற்கேற்ப தேர்வு செய்து அணியவேண்டும். நீண்ட கழுத்து கொண்ட பெண்கள் உயரம் குறைந்த கழுத்து ஒட்டிய நெக்லெஸ் அணிவது அழகாக்கி காட்டும் .

கலந்து அணியக்கூடாது


வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும். முக்கியமான விசயம் தங்க நகைகளை தனியாக அணிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தங்கத்தோடு, வெள்ளி, கவரிங் போன்ற நகைகளை இணைத்து அணியக்கூடாது.



வெளிநாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் அவற்றுடன் மெல்லிய செயின் சின்ன சின்ன ஜிமிக்கியே போதுமானது. அனைத்தையும் விட முக்கியமான விசயம் பொன்னகை அணிவதோடு உதட்டில் புன்னகையும் இருந்தால்தான் அழகை அதிகரித்துக் காட்டும் இல்லையில் வெறும் அலங்கார பதுமையாக மட்டுமே இருக்க நேரிடும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


சிம்ப்ளா நகை போட்டு இருக்கு அழகு.. அழகு.. இல்ல அஞ்சலி.. அஞ்சலி.


Sunday, January 22, 2012

ஜனவரி... 'அது' சண்டை மாசம்!?

ஜனவரி மாதத்தில் கணவன் மனைவி இடையே அதிகம் சண்டை, வாக்குவாதம் நடைபெறுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. குளிர் மாதத்தில் அதிக நேரம் தம்பதியர் ஒரே அறைக்குள் இருக்க நேரிடுவதே இந்த சண்டைக்கு காரணம் என்கின்றன ஆய்வு முடிவு.

ஆண்டு முழுக்க கணவன் - மனைவியரிடையே சண்டை, வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்தான். இது குறித்து இங்கிலாந்தில் 1000 தம்பதியரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஜனவரியில்தான் மன உளைச்சல்கள் அதிகம் என்று பெரும்பாலான தம்பதியர் குறிப்பிட்டனர். ஒருநாளைக்கு சராசரியாக 20 முறை வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனவரி மாதத்தில் சராசரியாக 38 சதவிகிதம் வீடுகளில் மோதல்கள் ஏற்படுகின்றன. 25 வயதுக்குக் குறைவானவர்களிடையே 48 சதவிகிதம் அளவுக்கு மோதல்கள் முற்றுகின்றன.

பொருளாதார பிரச்சினை

ஜனவரி மாதத்தில் பனியும் குளிரும் அதிகம். அதனால் கணவனும் மனைவியும் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக ஒன்றாக இருக்க நேரிடுகிறது. (அதிக நேரம் இருந்தால் ரொமான்ஸ்தானே வரணும்).

மோசமான பருவநிலை, நீண்ட இரவுகள், செலவுகள் அதிகமாவதால் சேமிப்பும் கையிருப்பும் குறைந்துவிட்ட நிலை போன்றவற்றால் மோதல்கள் வெடிக்கின்றன. பணம் சம்பாதிக்கும் ஆற்றல் கணவனுக்கு எவ்வளவு குறைவு என்பதை மனைவி அறியவும், செலவழிக்கும் ஆற்றல் மனைவியிடம் எவ்வளவு அதிகம் என்று கணவன் உணரவும் இந்த மாதம் பெரிதும் உதவுகிறது. எனவே பொருளாதாரப் பிரச்னைகளாலேயே பூசல் தொடங்குகிறது.



குளிர் விவாகரத்து

வருமானம் குறைவு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைவு போன்ற காரணங்களால் 65 சதவிகிதம் தம்பதியர் விவாகரத்துவரைகூட போகின்றனர். இனி இவரோடு வாழக்கூடாது என்று புத்தாண்டிலேயே தீர்மானித்துவிடுவதாக 7 சதவிகிதம் பேர் ஒப்புக்கொண்டனர். காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளவே முடிவதில்லை என்று 59 சதவிகிதம் பேர் வரை கூறியுள்ளனர்.



 ஜனவரி மாதத்தில் குளிர் அதிகம், சூரிய வெளிச்சம் குறைவு என்பதால் சோம்பலும் மன வெறுமையும் அதிகமாக இருக்கும் என்று உளவியலாளர் டோனா டாசன் தெரிவிக்கிறார். பண முடை, வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் நேரம் அதிகரிப்பு, சோம்பல், உற்சாகம் இன்மை, அடுத்து என்ன செய்வது என்ற இலக்கு இல்லாமை போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்தில் கணவன், மனைவியரிடையே பூசல்கள் அடிக்கடி தோன்றுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

வெயிலில் சண்டை குறைவு


அதே சமயத்தில் வெயில் காலங்களில் ஒரு நாளில் 10 மணி நேரம்தான் தம்பதியர் இருவரும் சேர்ந்து வீடு தங்குகின்றனர். அதிலும் பெரும்பாலும் தூங்குவதில் போய்விடுவதால் சண்டைக்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை. எனவே தான் ஜனவரி மாதம் சண்டை மாதம் என்று முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.



டிஸ்கி பஸ்கி முஸ்கி இல்ல
 
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

பார்ரா..... பயபுள்ள ஆர்வ்வத்தை...... ஆர்வ கோளாறு இருந்தாலும் அந்த தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியல.  


# கள்ளத்தொடர்புகள் விரைவில் படங்களுடன்...