முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.
டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.
நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
டிஸ்கி 1: இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
டிஸ்கி 2: சசிகலா நீக்கம்- அதிமுகவினர் பெரும் உற்சாகம்-மொட்டை அடித்துக் கொண்டாட்டம்!
சிறந்த பதிவுகளை வரவேற்கிறோம்...
ReplyDeleteகொஞ்சகாலமாவது கொஞ்சம் தள்ளி இருக்கட்டும்ய்யா, அம்மையாருக்கு ஏதேனும் நேர்ந்து விடாமல் இருக்கணும்...!!!
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம்!
ReplyDeleteபார்ப்போம் பார்ப்போம் எத்தன நாளைக்குனு
ReplyDeleteகாதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25