அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மால்யாவுக்கு வயது 13, இளைய மகள் ஷாஷாவுக்கு வயது 10. அவர்கள் இருவரும் 18 வயதை எட்டும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் குடும்ப விஷயங்கள் அடுத்தவர்களுக்கு தேவையில்லாமல் தெரிவிக்கப்படுவதை தடுக்க முடியும் என்று அவர் கருதுகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நமக்கு யார் என்றே தெரியாதவர்களிடம் நாம் ஏன் நம் குடும்ப விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும். அதனால் தான் எனது மகள்களை 18 வயதாகும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்றேன். இன்னும் 4 ஆண்டுகளில் இது பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்.
ஒபாமாவின் பேஸ்புக் பக்கத்தில் 24 மில்லியன் பேர் லைக் பட்டனை அழுத்தியுள்ளனர். இந்த வார துவக்கத்தில் அண்மையில் எடுத்த தனது குடும்ப போட்டோவை பேஸ்புக்கில் போட்டு புதிய ஒபாமா குடும்ப போட்டோ என்று பெயரிட்டிருந்தார். அந்த போட்டோவுக்கு 71,000 பேர் லைக் கொடுத்திருந்தனர், 11,000 பேர் கமென்ட் எழுதியிருந்தனர்.
பாருங்கப்பா...எல்லாம் அப்பா ஆனாதான் இதெல்லாம் தோனும் போல ஹிஹி!
ReplyDeleteசரிதான்..
ReplyDeleteஹா ஹா ஹா ஹா யோவ் என் மகன் பேஸ்புக்ல பத்துக்கு மேல அக்கவுண்ட் வச்சிட்டு இருக்கான், மெசேஜ்ல வேற வேற பெயர்ல வந்து லந்து பண்ணிட்டு இருக்கான் ஹி ஹி, அதான் ஒபாமா உஷார்'மா ஆகிட்டாரு...!!!
ReplyDelete