நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, December 18, 2011

மலையாள கட்சிகளின் எதிர்ப்பு-பணிந்தார் ப.சிதம்பரம்




கேரளத்தைச் சேர்ந்த மலையாளக் கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்களின் நெருக்குதலைத் தொடர்ந்தே ப.சிதம்பரம் பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய மற்ற பேச்சாளர்களை போல் நானும் கேரள மாநிலம் பிரவோம் இடைத்தேர்தல் காரணமாக கேரள கட்சிகள் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை கையாள்வதாக கூறினேன். இந்த கருத்தை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

இந்த கருத்து தேவையில்லாதது. யாருடைய மனதையும் புண்படுத்த இந்த கருத்தைக் கூறவில்லை. இந்த பிரச்னையை இரு மாநிலங்களும்பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

சென்னை காமராஜர் அரங்கில் நடந்த முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினை ஒரு விளக்கம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், பிரவோம் இடைத் தேர்தலை மனதில் கொண்டே கேரள கட்சிகள் முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீவிரப்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


டிஸ்கி : மத்திய உள்துறை மந்திரி எப்படியெல்லாம் பேசுகிறார் பாருங்கள் மக்களே - அவருக்கு புள்ளி விவர கணக்கு தெரியாமலா பேசி இருப்பார்.


5 comments:

  1. குறுஞ்செய்தி மட்டும்தானா?

    ReplyDelete
  2. மானம் ரோஷம் சூடு சொரணை இல்லாத ஒரு ஜந்துவை நாம் அமைச்சர் ஆக்கி இருக்கிறோம், வெக்கக்கேடு....!!

    ReplyDelete
  3. வைகோவை ஜெயிக்க வச்சிருந்தால் கூட, பாராளுமன்றத்தை கலக்கி இருப்பார், தமிழனுக்கு புத்தி பின்னால போல ச்சே...!!!

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. மத்திய உள்துறை மந்திரி எப்படியெல்லாம் பேசுகிறார் பாருங்கள் மக்களே - அவருக்கு புள்ளி விவர கணக்கு தெரியாமலா பேசி இருப்பார்
    >>>>
    தெரிந்திருந்தாலும் அவர் அப்பிடிதான் பேசுவார். பதவி படுத்தும் பாடு அப்படி

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...