நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, February 21, 2012

இதயம் ஒரு கோவில்

காதலின் சின்னம் இதயம். என் இதயமே என்றுதான் காதலுக்குரியவர்களை அழைக்கின்றோம். ஆனால் அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை பெரும்பாலோனோர் கவனிப்பதே இல்லை. கண்டதையும் சாப்பிட்டால் இதயமானது பலவீனமாகிவிடும். இதயத்திற்கு ஏற்ற இதமான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.



குறைந்த கொழுப்பு

இதயத்திற்கு முக்கிய எதிரியே கொழுப்பு சத்துதான். கெட்ட கொழுப்புகள் இதய நாளங்களில் படிவதினாலே உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகின்றன.

இதயத்தை பாதுகாக்க மாமிசங்கள், பால் பொருட்கள், சீஸ், வெண்ணெய் போன்றவைகளை அதிகம் உண்ணுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

உப்பு கம்மி பண்ணுங்க

இதயத்திற்கு மற்றொரு முக்கிய எதிரி உப்பு. அதிக உப்பு சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே உணவுப் பொருட்களில் உப்பு, சோடியம் போன்றவைகளை குறைத்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும்.

அதிக கலோரி உணவுகள்

அதிக கலோரி தரக்கூடிய உணவுகளை உட்கொள்வது உடம்பை குண்டாக்கும். இதனால் உடல் பருமனுக்கு ஆளாவதோடு இதயநோய்களுக்கு வழி வகுக்கும். எனவே குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

அதிக நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியவகைகளை உண்பது இதயத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.



வறுத்தவை வேண்டாம்

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உட்கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக வேகவைத்த, உணவாகவோ, மைக்ரோவே அவனில் செய்த உணவுகளையோ உட்கொள்ளலாம்.

சமையல் எண்ணெய்

சமைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் எண்ணெய் முக்கியமானது. மக்காச்சோளம், தவிட்டு எண்ணெய், சூரியகாந்திவிதை எண்ணெய், சோயாபீன்ஸ், பருத்திவிதை, ஆலிவ் ஆயில் எண்ணெய்களை உபயோகிக்கலாம். காய்கறிகளையும், சீசனில் கிடைக்கும் பழங்களையும் உணவில் பயன்படுத்தவேண்டும். உணவியல் வல்லுநர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் இதயத்தின் ஆரோக்கியம் என்றைக்கும் பாதிக்கப்படாது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இதயம் யாருக்...கோ??.
காதல் நட்புகிட்ட கேட்டுச்சாம்:
நான் இருக்கும் போது இந்த உலகத்துல நீ எதுக்காகா?

நட்பு சொல்லுச்சாம்: நீ எங்கு எல்லாம் கண்ணீரை விட்டு வருகிறாயோ அங்கெல்லாம் நான் புன்னகையை பரப்பி வருகிறேன். 

(அஞ்சலி போட்டாவுக்கும் - காதல் நட்பு டைலாக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்.) 

Monday, February 20, 2012

எப்படில்லாம் இருக்காங்கையா? வாழ்நாள் சாதனையாம்..

????


எப்படில்லாம் பாராட்டுகிறார்கள்.... ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ???


புகை படத்தை எப்படியெல்லாம் கையாளுகிறார்கள்


அளவுக்கு அதிகமாக தண்ணி அடிப்பவர்கள் (அவர்களின் குடும்ப நலன் கருதி) வீடு

 போய்ச் சேரும் நோக்கில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஆடையே.....?

ஆடை தயாரிப்பு கம்பனிகள் என்ன விவரமா இருக்காங்கையா.


நீர்க்கீரி என்ற இந்தக் கடல் வால் உயிரினம் தனது அடுத்த இரையான மீனுக்காக இரண்டு கையும் எடுத்து கும்பிடுகின்றது.
(கடவுளே எனக்கு ஒரு மீனை கொடு)

இந்தப் படத்தை எடுத்தவர் மராக் ஆண்ட்ரூ   இது அவரின் வாழ்நாள் சாதனையாம்.

3D படம் பெரிதாக்கி (எந்த கோணத்திலும்)பார்த்தால் வியப்படைவீர்கள்.

பி கேர் புல்....!!

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

அழகு எங்கிருந்தாலும் ரசிக்கணும்.....

Sunday, February 19, 2012

பசி இல்லையா?.. வாங்க படம் பார்ப்போம்.

மனிதர்களின் சுவை நரம்புகளை தூண்டி பசி உணர்வை அதிகரிக்கச் செய்வதில் போட்டோக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

பசியே எடுக்க மாட்டேங்குது என்று புலம்புவது பலரது வாடிக்கை. அவர்கள் உடனடியாக வகை வகையாக சமைத்து வைத்த போட்டோக்களை பார்த்தால் அவர்களின் சுவை நரம்புகளில் நீர் ஊறுமாம். இது பசி உணர்வை அதிகரிக்கச் செய்யுமாம். ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர்.

பசியை உணர்த்தும் புகைப்படங்கள்


ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுகளின் போட்டோக்களை காண்பித்தனர். அவர்கள் வயிறு பசியை உணர்த்தியது. மூளையானது உணவு உட்கொள்ளுமாறு தூண்டியது கண்டறியப்பட்டது. அதனால் உணவு மற்றும் பெரும்பாலான ஹோட்டல்களின் விளம்பரங்களில் உணவு வகைகள் குறித்த போட்டோக்கள் வெளியிடப்படுகின்றன.

சுவை நரம்புகள் தூண்டுதல்


மனிதர்களின் பசி உணர்வோடு தொடர்புடைய ஹார்மோன்களை தூண்டுவதில் இந்த போட்டோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனவாம். போட்டோக்களை பார்த்த உடன் பசி எடுத்து உணவை நன்றாக சாப்பிடுகின்றனராம். இந்த சைக்காலஜி தெரிந்துதான் நம் ஊர் ஹோட்டல்களில் வித விதமாக சமைத்த அயிட்டங்களை போட்டோ எடுத்து மாட்டி வைத்துள்ளனர்.


விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு

இப்புடி கலரா அழகா தலுக்கு மினுக்குன்னு ஆகணும்னா நல்லா சாப்பிடனுமாம்.

Saturday, February 18, 2012

கலைநயத்துடன் மணல் சிற்பங்கள்








 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இவுங்களும்....சிற்பம் தான்.. இல்ல....ஹிஹிஹி..
 

 

Wednesday, February 15, 2012

குரங்கு - கொரில்லா - ஆதி மனிதனின் அட்டகாசங்கள்



தங்களுடைய   உரிமைகள் கிடைக்கவில்லை என்று காட்டுக்குள்ள உள்ளவர்களும் ஆயுதம் தூக்கினால்.......???
கொரில்லா துப்பாக்கி எடுத்து இலக்கை சரி பார்க்கின்றது.

மனிதர்களைப் போல புத்திசாலிகள் தான் கொரில்லாவும்.


குரங்கில் இருந்து வந்தவன் ம...னி...த...ன்....ஆமால்ல



விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கொரில்லா போர் கொரில்லா போருன்னு கேள்விப்பட்டிருக்கேன் அதானா இது


Tuesday, February 14, 2012

காலம் போற போக்க பாருலே...நேசிப்பவர்களுக்கு..எந்த அறிவு புடிக்கிறது - உசார்.

நேசிப்பவர்களுக்கு  வாழ்த்துக்கள்



மேமே......மேமே.... வானிலே மே..மே..  ஆனதே


மாத்தி..மாத்தி புடிக்கிறது  (அதாங்க போட்டோவ) மட்டுமில்ல...இந்த மாதிரி புடிச்சி...... காப்...பதறது.

ஐந்தறிவு, ஆறறிவு... எங்கே சொல்லுங்க யாருக்கு எந்த அறிவுன்னு!?


காலம் போற போக்க பாருலே

அம்மா என்று அழைக்காதே உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே..


சாலை மறியல் - இடம் மேட்டுபாளையம் (கோயம்புத்தூர்) முக்கிய சந்திப்பு. ஒய் மறியல்?
இரவு நேர மின்வெட்டால் இரண்டு பெண்கள் கற்பழிக்க பட்டார்கள் (பார்ரா... மின்வெட்டு எதுக்கெல்லாம் பயன் பெருதுன்னு)
  விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


உசார்.......உசார்.......உசார்.


 

படங்கள் நன்றி: முகநூல் நண்பர்களுக்கு

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டோ? - சில யோசனைகள்

பண்டைய காலங்களில் அத்தர், ஜவ்வாது போன்றவைதான் மணம் தரும் வாசனைப் பொருட்களாக இருந்தன. வியர்வை வாசம் போக்குவதோடு மட்டுமல்லாது மனம் மயக்கும் பொருட்களாகவும் இருந்தன. இன்றைக்கு மேல்தட்டு வர்கத்தினர் மட்டுமல்லாது அலுவலகம் செல்லும் பெரும்பான்மையோர் பெர்ப்யூம் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். எந்த மாதிரியான பெர்ப்யூம் உபயோகிப்பது என்று அழகுக்கலை நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.

வாசனைப் பொருட்களை உபயோகிக்கும் போது முதலில் மணிக்கட்டு, இதயத்தின் நடுப்பகுதி, முழங்கை, காது பின்பகுதி போன்ற பகுதிகளில் லேசாக தடவலாம். வாசனை ஆளைத் தூக்கும்.

வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், போன்றவற்றிர்க்கு ஏற்ப பெர்ப்யூம் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் கருப்பான சருமம் உள்ளவர்களும், சிவந்த நிறம் உள்ளவர்களும் அதற்கேற்ப தனியான பெர்ப்யூம் தேர்ந்தெடுக்கவேண்டும்.

சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.

அலர்ஜியில் கவனம்

எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை கவலைப்படாமல் உபயோகிக்கலாம்.

சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது. சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.


விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு




இவுகள மாதிரியே சின்ன வயசுல பக்கத்தாத்து பொண்ணு... (அவுகதான் இவுகளோ) பாத்துண்டே.....இருக்கலாம் அழகான கூந்தல்.
  இளமனசு அது ஒரு  (காதல்) காலம்

Monday, February 13, 2012

பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

தமிழ்த் திரையுலகில் டாக்டர் சீனிவாசனின் 'ஆனந்தத் தொல்லை'க்கு அளவே இல்லாமல் போய் வருகிறது.

தயாரித்து, நடித்து, வசனம் பேசி அவர் செய்யும் 'சில்மிஷங்களைப்' பார்த்து தமிழ் திரையுலகமே புளகாங்கிதமடைந்து போய் நிற்கிறது!!.


லத்திகா என்ற படத்தைத் தயாரித்தார். அதில் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது வில்லனாகவும் ஆனந்தத் தொல்லை படத்தில் அதகளம் செய்ய வருகிறார், தான் எதைப் பேசினாலும் அதை சீரியஸாக கருதிப் பேசும் டாக்டர் சீனிவாசன். இவர் தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர் 'பவர் ஸ்டார்'. (என்ன பவருக்கு ஸ்டார்ன்னு  சொன்னா...?? சொல்லவே இல்லையே... ஹிஹி ஹி ஹி)

பிரபல நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள்தான் போட்டா போட்டி போடுவார்கள்.ஆனால் சீனிவாசனோ அதற்கு ஒரு படி மேலே போய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு, விளம்பரமாகவும் பத்திரிகைகளில் பிரசுரித்து  (லேட்டஸ்ட் ட்ரென்ட்..மத்த ஸ்டார்களால் முடியுமா?) கலக்கிக் கொண்டிருக்கிறார்.    


இவர் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி  கொடுத்துள்ளார். அதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம்ப முடியாதது போலத்தான் தோன்றும். ஆனால் அதை நம்புபம்படி (நம்புறோம் வேற வலி) வேண்டி விரும்பிக் கேட்டுக் கொல்கிறோம்.

 படியுங்கள் சீனி..சாரி பவர் ஸ்டார் சொன்னதை...! (ஸ்டார்ட் மியூசிக்....ஹல்....லோ இது வேற)

என்னை பொறுத்தவரை ஏனோ தானோ என்று படம் பண்ண விருப்பம் இல்லை. நல்ல கதை தான் ரொம்ப முக்கியம்.(அப்படி போடு அருவாளை மொத அடியே...ம்)
ஜோடி செம பொருத்தம்

ஆனந்தத் தொல்லைப் படத்தைத் தொடர்ந்து அடுத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சங்கவி தான் என் ஜோடி. (ச.ங்.க.வி.யா?) படத்தை நானே இயக்கி நடிக்கிறேன்.


இவுக கூடவும் நடிபிங்களா??......நடிக்கணும்.

இதற்கு அடுத்து படைத்தலைவன். இந்தபடம் ஒரு போலீஸ் ஸ்டோரி. மாரி மைந்தன் இப்படத்தை இயக்குகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதை விட ரொம்ப முக்கியம் சங்கவி மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் மன்மத ராசா பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும்.(பார்ரா)

சினிமா மட்டும் இல்ல, சொந்தமா பிசினஸ் இருக்கு, கிளினிக் இருக்கு, அதை தவிர எனக்கு கல்லூரி மாணவர்கள் ரசிகர்கள்  அதிகம்.(நோட் திஸ் பாயிண்ட்)


தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள படங்கள் பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க விரும்புகிறேன். நீங்க தான் அடுத்த எம்.ஜி.ஆரா என்று கேட்காதீங்க. நான் அப்படி சொல்ல வரவில்லை. அவருக்கு அடுத்து நான் தான் வருவேன். (சர்தான்...ம்...ம்மாவுக்கு தெரியுங்களா? # டவுட்டு.) இன்னும் ரசிகைகள் மனதில் (அதானே முக்கியம்) இடம் பிடிப்பேன்.

எனக்கு கூட ஒரு சமயம் பாரதிராஜா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று தோணுச்சு, அப்புறம்தான் அவர்கிட்ட போய் வாய்ப்பு கேட்டு நிக்குறது பதிலா நாமலே படம் டைரக்ட் செய்யலாம் (மானஸ்தன்யா...டீ...ல்... பிடிச்சிருக்கு) என்று முடிவு பண்ணி, படம் இயக்க தொடங்கினேன்.

இப்பகூட தினமும் பத்து கதைகள் (10 கதையா...ஆ.....) கேட்கிறேன், ஆனால் எனக்கு செட் ஆனா மட்டும் தான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்...


ஸ்...யப்பா... இப்பவே கண்ணைக் கட்டிக்கிட்டு வருதே...???!!!

பளபளன்னு ஜொலிக்க முடியும்னு நம்பிக்கைய்யா..நம்பிக்கை - உண்மை.

உடற்பயிற்சி குறித்து பலரும் பலவிதமாக கூறுகின்றனர். எதை பின்பற்றுவது? எதை விடுவது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கும். குறிப்பாக உடல் எடை குறைப்பது பற்றி வெளியாகும் விளம்பரங்களும், உணவுமுறைகளும், உடற்பயிற்சி சாதனங்களும் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி குறித்த நம்பிக்கைகளும், அதற்கான விளக்கங்களையும் தெரிவித்துள்ளனர் உடற்பயிற்சி வல்லுநர்கள்.

நம்பிக்கை - 1

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு, நாம் ரசித்துச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் துறக்க வேண்டும்.

உண்மை : சரியான உணவுமுறை என்பது உடலை சிறப்பாக்கும். பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதில்லை. உணவில் கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. விருப்பமற்ற உணவை கட்டாயமாக சாப்பிட்டால் மன ஆரோக்கியம் குறையும்.

நம்பிக்கை - 2 அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.

உண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.

நம்பிக்கை - 3

காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி.

உண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமும் குறையும்.

நம்பிக்கை - 4

எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் நம் உடம்புக்கு ஏற்றவைதான்.

உண்மை: வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில் பயிற்சி செய்யும் போது, உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.

நம்பிக்கை - 5

உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.

உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.

நம்பிக்கை - 6

வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை.

உண்மை: `ஜிம்’ பயிற்சியின்போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்பயிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.

நம்பிக்கை - 7

உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும்.

உண்மை:மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை.

நம்பிக்கை – 8

வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இள வயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.

உண்மை : உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு `ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்’ அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். ஆனால் மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவசியம். அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

நம்பிக்கை - 9
கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.

உண்மை : கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் மாற்றும்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

பக்கத்து நாட்டுல இருந்து வந்த புள்ளைக்கு தெரிந்த சூட்சமம் நம்ம ஊரு புள்ளைக்கு தெரியாம நெஞ்சில குத்திகிட்டு (டாடூசை) திரியுது.



பளபளக்கும் டாட்டூஸ்க்கு  ஏத்த இடம்தான்யா....அப்பத்தான் பீல்டில்

ஜொலிக்க முடியும்னு நம்பிக்கைய்யா..நம்பிக்கை.


Sunday, February 12, 2012

மலர்கள் பலவிதம் பெண்களே மலர்களானால்...!?

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்

பெண்களின்.... இல்ல, மலர்களின் அழகை