நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, February 19, 2012

பசி இல்லையா?.. வாங்க படம் பார்ப்போம்.

மனிதர்களின் சுவை நரம்புகளை தூண்டி பசி உணர்வை அதிகரிக்கச் செய்வதில் போட்டோக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

பசியே எடுக்க மாட்டேங்குது என்று புலம்புவது பலரது வாடிக்கை. அவர்கள் உடனடியாக வகை வகையாக சமைத்து வைத்த போட்டோக்களை பார்த்தால் அவர்களின் சுவை நரம்புகளில் நீர் ஊறுமாம். இது பசி உணர்வை அதிகரிக்கச் செய்யுமாம். ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர்.

பசியை உணர்த்தும் புகைப்படங்கள்


ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுகளின் போட்டோக்களை காண்பித்தனர். அவர்கள் வயிறு பசியை உணர்த்தியது. மூளையானது உணவு உட்கொள்ளுமாறு தூண்டியது கண்டறியப்பட்டது. அதனால் உணவு மற்றும் பெரும்பாலான ஹோட்டல்களின் விளம்பரங்களில் உணவு வகைகள் குறித்த போட்டோக்கள் வெளியிடப்படுகின்றன.

சுவை நரம்புகள் தூண்டுதல்


மனிதர்களின் பசி உணர்வோடு தொடர்புடைய ஹார்மோன்களை தூண்டுவதில் இந்த போட்டோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனவாம். போட்டோக்களை பார்த்த உடன் பசி எடுத்து உணவை நன்றாக சாப்பிடுகின்றனராம். இந்த சைக்காலஜி தெரிந்துதான் நம் ஊர் ஹோட்டல்களில் வித விதமாக சமைத்த அயிட்டங்களை போட்டோ எடுத்து மாட்டி வைத்துள்ளனர்.


விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு

இப்புடி கலரா அழகா தலுக்கு மினுக்குன்னு ஆகணும்னா நல்லா சாப்பிடனுமாம்.

1 comment:

  1. இப்ப புரியுது..
    அந்த படங்களைக் கண்டவுடன் நாக்கில் ஏன் எச்சில் ஊறுகிறது என்று!!

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...