நான் செத்தால், அதற்கு காங்கிரஸ் கட்சிதான் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் கிராம மக்களிடையே பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’நான் டெல்லி ராம்லீலா மைதானத்தில், வருகிற 27-ந் தேதியில் இருந்து 8 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.
அந்த போராட்டத்தின்போது, நான் செத்தால் அதற்கு காங்கிரசே பொறுப்பு. ஜன லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் கோடிக்கணக்கான சாதாரண மக்கள் என் பின்னால் நிற்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியோ, அதன் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி போடும் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடுகிறது. அவர் லோக்பால் மசோதாவை ஆராயும் பாராளுமன்ற நிலைக்குழுவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment
இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...