நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, December 3, 2011

பெங்களூர் சிறந்த நகரம்

இந்தியாவில் மக்கள் வசிக்க சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. அதேசமயம், பாதுகாப்பில் சென்னைக்குதான் முதலிடம் கிடைத்துள்ளது.

உலகில் வாழ தகுதியான நாடு மற்றும் நகரங்களின் வரிசை குறித்து மெர்சர் என்னும் நிறுவனம் நடுத்திய கருத்துகணிப்பில் இது வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள், பாதுகாப்பு சூழல், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் உலக அளவில் மக்கள் வசிக்க சிறந்த நகரமாக ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னா நகரம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூரிச், ஆக்லாந்து போன்ற நகரங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

பெங்களூர் சிறந்த நகரம்

இந்தியாவில் மக்கள் வசிக்க ஏற்ற மிகச்சிறந்த நகரமாக பெங்களூர் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. இது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதன்மை இடத்தை பெற்றுள்ளது. உலக அளவில் பெங்களூர் 141 இடத்தை பெற்றுள்ளது. டெல்லி 143 வது இடத்தையும், மும்பை 144 வது இடத்தையும், சென்னை 150 வது இடத்தையும், கொல்கத்தா 151 வது இடத்தையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பான நகரம்
உலகிலேயே பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் ஐரோப்பாவில் உள்ள லுக்கம்பர்க் நகரம் முதன்மையிடத்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெர்ன்,ஹெல்சின்கி ஜூரிச்,வியன்னா,ஜெனிவா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.
  
சென்னை 108 வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூர் 117 இடத்தையும், டெல்லியும், கொல்கத்தாவும், 127 வது இடத்தை பிடித்துள்ளன. மும்பை 142 வது இடத்தை பிடித்துள்ளது.

‌‌பெங்களூரூவில் அமைந்துள்ள ஐ,டிதுறையி்ன் வளர்ச்சிமற்றும் பாதுகாப்பான வாழக்‌கை தரம் போன்வற்றால் இந்திய நகரங்களின் வரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் டெல்‌லியை ப‌ொறுத்தவரையில் அரசியல் பரபரப்பும் மும்பை வர்த்தகத்துறையில் முதலிடம் பிடித்திருப்பதாலும், சென்னை, ‌கொல்கத்தா ஆகிய நகரங்கள் வளர்ந்து வரும் தொழில் துறையாலும் முக்‌கிய இடத்தை பிடித்துள்ளன.

9 comments:

  1. அப்ப பதுரை, நெல்லை எல்லாம் எந்த இடம்?

    ReplyDelete
  2. வேடந்தாங்கல் - கருன் *! said...
    அப்ப பதுரை, நெல்லை எல்லாம் எந்த இடம்?//

    எலேய் வாத்தி, பதுரை எங்கே இருக்கு..?

    ReplyDelete
  3. பெங்களூர் இரண்டு முறை போயிருக்கேன், சும்மா சாரல் மழை பெய்துகொண்டே இருக்கிறதுமல்லாமல், சில்லுன்னு இருக்கும் ஊர்...

    ReplyDelete
  4. நல்ல ஏரியா தான் .. ஆனாலும் பூம்புகார் பூம்புகார் தான்

    ReplyDelete
  5. உண்மைதான்...என்ன மக்கள் கொஞ்சம் லேட்டாத்தான் எதையும் செய்வாங்க...ஆனா ஸ்ட்ராங்கா செய்வாங்க!

    ReplyDelete
  6. பாதுகாப்பன நகரம் சென்னை ???

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...