நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 30, 2011

முல்லைப் பெரியாறு - தமிழக எம்.பி.,க்கள் சொதப்பல்

தமிழகத்தின் நிலையோ, பார்லிமென்டில் நேற்று தலைகீழாக இருந்தது. கேரள எம்.பி.,க்களின் வேகத்தை பார்த்துவிட்டு, தமிழக எம்.பி.,க்களும் காந்தி சிலை அருகே தர்ணா செய்யப் போகின்றனர் என்ற செய்திபரவியது.அங்கு சென்று பார்த்தால், திருமாவளவன் தலைமையில் கோவை நடராஜன், தென்காசி லிங்கம், ஈரோடு கணேசமூர்த்தி என, நான்குபேர் தர்ணாவில் அமர்ந்திருந்தனர். "புரளியை கிளப்பாதே, பொய் செய்தியை பரப்பாதே' என, அந்த நான்கு பேர் மட்டுமே கோஷமிட்டபடி இருந்தனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.,யான கே.எஸ். அழகிரி அங்கு வந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

போட்டி தர்ணா:

இவர்களுக்கு போட்டியாக, சில அடி தூரத்தில் கேரளா எம்.பி.,க்கள் 20க்கு மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக அமர்ந்து, கோஷங்கள் எழுப்பினர். சில நிமிடங்களில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அகமது, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கேரளா எம்.பி.,க்களுக்கு தார்மீக ஆதரவு அளித்துவிட்டு, பின்னர், தமிழக எம்.பி.,க்களிடம் வந்து, "தண்ணீர் தருகிறோம், எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்' என, சிரித்தபடியே திருமாவளவனிடம் கூறிச் சென்றனர்.அடுத்த அரைமணி நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து மனு அளித்தனர். தமிழக மீனவர் பிரச்னை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக, தனித்தனி மனுக்களை டி.ஆர்.பாலு தலைமையில் அளித்துவிட்டு வந்தனர்.அங்கும் திருமாவளவன் வந்திருந்தார். அவர்கள் சென்ற சில நிமிடங்களில், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் அழகிரி, சித்தன், விஸ்வநாதன், ராமசுப்பு, மாணிக் தாக்கூர், ஆருண் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களும்தங்கள் பங்கிற்கு மனு அளித்துவிட்டு சென்றனர்.முல்லைப் பெரியாறு அணை
பிரச்னையில், இப்படி தமிழக எம்.பி.,க்கள் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆளுக்கொரு திசையில் நின்றபடி, தனி ஆவர்த்தனம் வாசித்தபடி உள்ளனர். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில், அரசியல் ஒற்றுமை காட்டி, தற்போதைக்கு கேரளா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அழைப்பை நிராகரித்த எம்.பி.,க்கள் :கேரள எம்.பி.,க்களுக்கு பதிலடி தர, காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் செய்யும் முடிவை எடுத்து, அது பற்றி தி.மு.க., எம்.பி.,க்களுக்கும், திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.அவர்களோ, "நாங்கள் பிரதமரை சந்தித்து மனு தரப்போகிறோம்' எனக் கூறிவிட்டு, தர்ணாவில் பங்கேற்காமல் நாசூக்காக கழன்றனர். அ.தி.மு.க., எம்.பி.,க்களை அழைத்த போது, "அம்மாவிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் வரமுடியாது' என்று சொல்லி விட்டனர்.இடதுசாரி எம்.பி.,க்களில் கூட லிங்கமும், நடராஜனும் மட்டுமே பங்கேற்றனர். இடதுசாரி மூத்த எம்.பி.,க்களான டி.ராஜா மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வரவில்லை.கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சென்று, பிரதமரை சந்தித்து இப்பிரச்னை குறித்து பேசினர். ஏ.கே.அந்தோணி கூட இவ்விஷயமாக பிரதமரிடம் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...