திமுக வட்டாரத்திலிருந்து நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள முதல் பிரமுகர் என்ற பெருமையை பொட்டு சுரேஷ் பெற்றுள்ளார். இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக மதுரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை சந்திக்க விரும்பாத மு.க.அழகிரி சென்னை வழியாக டெல்லிக்குப் போய் விட்டார்.
பாளையங்கோட்டை சிறைக்கு வந்த பொட்டுவின் ஆதரவாளர்கள், சுரேஷை ஆரவாரத்தோடு மதுரைக்கு அழைத்து வந்தனர்.
மதுரைக்கு வந்ததும் முதலில் அழகிரியைத்தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சுரேஷ். ஆனால் இப்போது அவரை சந்திக்க விரும்பவில்லையாம் அழகிரி. இதனால் அவர் நேற்று இரவோடு இரவாக மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். இன்று காலை டெல்லிக்குப் போயே போய் விட்டார்.
இதுதான் கழுவுற மீன்ல நழுவுற மீன்னு சொல்றதோ...???
ReplyDeleteஅரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
ReplyDelete