முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
இதன் ஒரு பகுதியாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக தி.மு.க. எம்.பி.க்கள் அறிவித்தனர். அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காந்திசிலை முன்பாக பகல் 12 மணிக்கு ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகிய இரு எம்.பி.க்கள் மட்டுமே அடையாள உண்ணாவிரதத்திற்காக அமர்ந்தனர்.
பத்திரிகை புகைப்படக்காரர்கள் ஒவ்வொருவராக வந்து படம் எடுக்கும் படலம் முடிந்ததும் பிற்பகல் 2 மணிக்கு இருவரும் எழுந்து சென்றனர்.
நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதிமாறன், ஜெ.கே. ரித்திஷ், தாமரைச்செல்வன் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்திலே இருந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
தி.மு.க. தலைமை அறிவித்த போராட்டத்தில் நான்கு எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து கொண்டே கலந்து கொள்ளவில்லை. இந்த நான்குபேர் தலைமை அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவமரியாதை செய்ததைவிட, இருவர் உண்ணாவிரதம் என்ற பெயரில், இரண்டு மணிநேரம் உண்ணாவிரதம் என்று இருந்து, போஸ் கொடுத்துவிட்டு, ஒரு கேலி கூத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு மணிநேர உண்ணாவிரதமும், அதுவும் புகைப்படக்காரர்கள் வந்து படமெடுத்து பிறகு எழுந்து சென்றதும் எதற்காக? இப்படியொரு சடங்கு, சம்பிரதாயம் தேவையா?
உண்ணாவிரதம் என்றால் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை என்று இருத்தல்தானே நியாயம்.
இந்த பார்ட் டைம் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் டெல்லியில் இருந்துக்கொண்டே உண்ணாவிரதத்தைப் புறக்கணித்தவர்களையும் தி.மு.க. தலைமை கண்டிக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்காதோ என்று தோன்றுகிறது.
ஏனென்றால், 2009-ம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட போரில் அப்பாவி தமிழர்கள் குண்டுகளுக்கு பலியானதை கண்டித்து மூன்றரை மணிநேரம் அதாவது பார்ட் டைம் உண்ணாவிரதத்தை நடத்தியவரே தி.மு.க. தலைவர் கருணாநிதிதானே. இவர் எப்படி எம்.பி.க்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டிக்கப்போகிறார் என்று தான் தெரியவில்லை?
நன்றி தமிழ் லீடர்
என்னத்த சொல்றது..அக்கறை இல்லாத்தனம் தான்..
ReplyDeleteநம் தளத்தில்
'ஐம்புலனுக்கும் அறிவில்லை'
மாப்ள கேள்வி எல்லாம் கேக்கப்படாது!
ReplyDeleteபார்ட் டைம் உண்ணாவிரதம்.. ஹா.ஹா...
ReplyDeleteதலைவர் எவ்வழியோ தொண்டர் அவ்வழி............
ReplyDelete