நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Friday, May 18, 2012

சென்னை தமிழ் அகராதி

செம போர் என்ன செய்ருத்னே தெர்லபா....  
ஆணியா  புடுங் .... முடியல அப்படிக்கா பேஜாரு.....அப்பாலிக்க வந்துச்சு பாரு... ஐடியா அதான்

மொழி பெயர்ப்பு:  

· கலாய்க்கிறது - கிண்டல் செய்வது
· வூட்டாண்டா - வீட்டிற்கு பக்கத்தில்
· குந்து - உட்கார்
· கன்பீஸ் - குழப்பம்
· டப்பு - பணம்
· கயித - கழுதை
· கம்னாட்டி - கோமாளி
· கஸ்மாலம் - முட்டாள்
· பீலா - பொய் சொல்வது
· டம்மி பீஸ் - ஒப்புக்கு சப்பாணி
· கீது - இருக்கு
· மெரிசிடுவேன் - மிதித்துவிடுவ
· இட்டுன்னு - கூட்டுக்கொண்டு
· அப்பால - அப்புறம்
· கிரஷ்னாயில் - மண்ணெண்ணெய்
· மாலு - கமிசன்
· மட்டை - போதையில் விழுவது
· மஜா - கேளிக்கை
· சொக்கா - சட்டை
· பீட்டர் - பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
· சல்பேட்டா - மலிவு விலையில் மது
· தொங்குறது - ஒதுங்குதல்
· டபாய்க்குறது - ஏமாற்றுதல்
· அவுல் குடுக்குறது - ஏமாற்றுவது
· பல்பு வுட்டுடான் - இறந்துட்டான்
· பகிலு - இடுப்பு பகுதி
· பேஜார் - அறுவை
· டர், மெர்சல் - பயம்
· டுமீல் - பொய்
· டொச்சு - அழகில்லாத
· அட்டு - சுமாரான
· அப்பீட்டு - வெளியேறுதல்
· எகிறு - வேகமாக ஓடு
· காண்டு - கோபம்
· போங்கு - கள்ளத்தனமாக
· கலீஜ் - அசுத்தம்
· கப்பு - நாற்றம்
· கில்பான்ஸ் - பளபளப்பான ஆள்
· கில்லி - திறமையான ஆள்
· குஜால்ஸ் - கொஞ்சல்
· குஜிலி - இளம்பெண்
· இப்படிக்கா - இந்த வழியாக
· சோமாறி - ஒழுக்கமற்றவன்
· ஜாக வாங்குறது - பின் வாங்குவது
· ஜல்பு - ஜலதோஷம்
· ஜல்சா - சரசம்
· பிகிலு - விசில்



டிஸ்கி : சென்னை தமிழை ஏதோ எனக்கு தெரிந்த வரையில் தமிழில் மொழி பெயர்த்து விட்டேன் (ஏதாவது தவறு இருப்பின் மன்னிச்)  இன்னும் வரும்.....(இன்னும் வரும்மா) .ஷ் ....அப்பாட.



விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு





முழுசா வேணும்னாங்கலேன்னு

முன் பக்கம் பார்த்தேன்

முள்ளா வைத்துள்ளாய்  பார்வைக்குள்

முறுக்கேறுதே  நாடி நரம்புகள்

முறையாகத்தான் பிடித்துள்ளான் உன் புகைப்படத்தை

மூச்சு திணறிப்போகட்டுமென.
 

22 comments:

  1. நிஜமாகவே இப்படி ஒரு மொழி உபயோகம் தமிழ் பயன் பாட்டில் இருக்கிறதென்பது பெரிய ஆச்சிரியம்தான்.

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ அப்ப இது வரைக்கும் தெரியாதா??? சகோ இப்பவாது தெரிந்து கொண்டீர்களே

      Delete
  2. ரொம்ப ஆராய்ச்சி பன்னிருகிங்க ...

    ReplyDelete
  3. என் girl friend போட்டோவை ஏன் போட்டிங்க ?

    ReplyDelete
    Replies
    1. உங்க பிரெண்டாஹி ஹி ஹி

      மன்னிச்.

      Delete
  4. செம்மொழி வார்த்தைகளை சோக்கா சொன்னீங்க போங்க...

    ReplyDelete
  5. குஜிலி சோக்கா கீதுப்பா......

    ReplyDelete
  6. // ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி...
    நிஜமாகவே இப்படி ஒரு மொழி உபயோகம் தமிழ் பயன் பாட்டில் இருக்கிறதென்பது பெரிய ஆச்சிரியம்தான்.//

    இப்படி ஒரு மொழி உங்களுக்கு தெரியாம இருக்கிறதுதான் பெரிய ஆச்சிரியம்.

    ReplyDelete
    Replies
    1. விடுங்க விடுங்க பாஸ்

      Delete
  7. ஒண்ணியும் பண்ணாம சொம்மா குந்திக்கினு இருக்காம எதுனா எழுதனுன்னு நெனிக்கிற பாரு.. ஓம்மன்சு எனுக்கு ரொம்ப புட்ச்சிப் போச்சிப்பா!
    ஷோக்காத்தான் எழுதிக் கீர (மெய்யாலுமே.!)

    அப்டியே நம்ம ஆராச்சியும் இங்க வந்து பாத்துட்டு போங்கோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே

      படிச்சேன் படிச்சேன் உங்க அளவுக்கு இன்னும் நாங்க வளரனுமோ ம்

      Delete
  8. எம் தமிழ் மொழிக்கு இப்படி ஒரு நிலைமையா

    ReplyDelete
  9. இன்னா நைனா, யாரு அந்த குஜிலி? அத்ததான் நீ டாவு கட்டுறியா? உன் பொஞ்சாதிக்கு தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி கோர்த்து விட்ரதுலேயே குறியா இருக்கீங்களே சகோ

      Delete
  10. பேசாமா நீங்க கோனார் தமிழ் உரைக்கு விளக்க உரை எழுத போகலாம் பாஸ் ..!

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு ஐடியா நமக்கு தோணாம போச்சே

      Delete
  11. சென்னை
    ராயபுரத்தில் எந்த ஸ்கூல்ல படிச்சீங்க ம் (:

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பா சென்னை நண்பரின் சகவாசத்தில் தெரிந்து கொண்டேன்

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...