நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, November 20, 2011

விலை உயர்வின் "தைரிய கணக்கு...!'

கட்டண உயர்வுகளால், ஓட்டு வங்கி அரசியலுக்கு உடனடி பாதிப்புகள் இல்லை என்று கணக்கிட்டு தான், பஸ் கட்டணத்தையும், பால் விற்பனை விலையையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மின் கட்டண உயர்வை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்துவிட்டதும், லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதும், அ.தி.மு.க., அரசுக்கு பாதுகாப்பான காலங்களாகவே உள்ளன.
மாநில அரசைப் பொறுத்தவரை, கட்டண உயர்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பப் போவதில்லை. விலை உயர்வுக்கு எதிர்க் கட்சிகளின் தாக்குதல் இப்படித் தான் இருக்கும் என எதிர்பார்த்து, பால், பஸ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது என்று கூறுகின்றனர்.விலைகளை உயர்த்தி, மக்களுக்கு வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிலும் இது தெளிவாகவே வெளிப்பட்டு உள்ளது. மேலும், விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் களம் இறங்குவதற்கு முன்பே, அதற்கான தவிர்க்க முடியாத காரணங்களை மக்கள் மத்தியில், நாமே எடுத்துச் செல்வோம் என முடிவு செய்து "டிவி'யில் மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார் என்றும் கூறுகின்றனர். இதனால், எதிர்க்கட்சிகளின் போராட்ட வேகத்தைக் குறைக்கவும் முதல்வர் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.மாநில அரசுக்கு, உடனடித் தேர்தல்கள் இல்லாத பாதுகாப்பான சூழ்நிலை, எதிர்க்கட்சிகளையும், மக்களையும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுவே, அதிரடி முடிவுகளின் ஒரு பகுதியாக பஸ், மின் கட்டணங்களையும், பால் விலையயும் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி உள்ளதற்குக் காரணம் என்கின்றனர்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...